வங்கித்துறையில் இறங்கும் இந்தியா கார்பரேட் நிறுவனங்கள்!! ரிலையன்ஸ், பிர்லா, ஏர்டெல்...

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களாக கருதப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பிர்லா குரூப் போன்ற நிறுவனங்கள் பொது மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து இந்தியாவில் பேமெண்ட்ஸ் வங்கி அமைப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அளித்த தகவல் படி ரிலையன்ஸ், பிர்லா, வோடாபோன், உட்பட 70 நிறுவனங்கள் இந்தியாவில் பேமென்ட்ஸ் வங்கி அல்லது ஸ்மால் பைனான்ஸ் பாங்க் அமைக்க விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் திங்கட்கிழமை (02.02.2015).

டிஜிட்டல் பரிமாற்றம்

டிஜிட்டல் பரிமாற்றம்

இத்தகைய பேமெண்ட் வங்கி அமைப்பதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் சேவை புதிய உச்சத்தை எட்டும். மேலும் அதிகளவிலான சிறு பரிமாற்றங்கள் நடைபெறும். இவை அனைத்தும் மொபைல் தளத்தின் வழியாக செய்துக்கொள்ள கூடியவை. மேலும் இத்திட்டம் முற்றிலும் ரிசர்வ் வங்கியின் திட்டமிடலில் உருவானது.

கூட்டணி

கூட்டணி

இந்தியாவில் பேமெண்ட்ஸ் வங்கி அமைப்பதற்காக ரிலையன்ஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்துள்ளது. இது தவிர ஆதித்யா பிர்லா நுவோ, ஐடியா நிறுவனத்துடன் இணைந்துள்ளது, ஏர்டெல் நிறுவனம் கோட்டா வங்கியுடன் இணைந்துள்ளது. தனிப்பட்ட நிறுவனங்களாக வோடாபோன், ஃபியூச்சர் குரூப், DHFL, பினோ பேடெக், வக்ராங்கி சாப்ட்வேர் போன்ற நிறுவனங்களும் விண்ணப்பத்துள்ளது.

நிதி நிறுவனங்கள்

நிதி நிறுவனங்கள்

இதில் தனியார் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் இதுவரை நிதி நிறுவனங்களாக செயல்பட்ட நிறுவனங்களும் இப்புதிய திட்டத்தில் இறங்க ஆர்வம் காட்டியுள்ளது. இதில் முத்தூட் பைனான்ஸ், எஸ்கேஎஸ், சோலமண்டலம் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களும் இறங்கியுள்ளது.

பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல்

மேலும் இத்திட்டத்தில், சில மாதங்களுக்கு முன் இந்தியா போஸ்ட் மற்றும் மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் ஆர்வம் காட்டியது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி எந்த விதமான அறிவிப்பும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.

சில்லறை விற்பனை நிறுவனம்

சில்லறை விற்பனை நிறுவனம்

மேலும் ரிசர்வ் வங்கியில் விண்ணப்பம் அளித்த 70 நிறுவனங்களில் சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபியூச்சர் குரூப் நிறுவனம் அடக்கம். இந்நிறுவனம் ஒரு நாளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட பண பரிமாற்றங்களை செய்து வருகிறது.

சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு

மேலும் பேமெண்ட் வங்கியில் பிற வங்கியில் அளிப்பது போலவே சாதாரண சேமிப்பு கணக்குகள் திறக்கப்படும், டெபிட் கார்டு உண்டு, கிரேடிட் கார்டு இல்லை. 1 இலட்சம் ரூபாய் வரை சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யலாம். மேலும் இத்தகைய பேமெண்ட் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் அளிக்காது.

வங்கிகளுக்கு தான் லாபம்

வங்கிகளுக்கு தான் லாபம்

பேமெண்ட் வங்கிகள் அமைப்பதில் வங்கித் துறையில் இல்லாத தனியார் நிறுவனங்களுடன் வங்கிகள் இணைவதன் மூலம், தனியார் நிறுவனங்களின் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வங்கிகள் கடன் பெற முடியும். இதன் மூலம் வங்கிகளின் வர்த்தகம் அதிகரிக்கும்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+