மும்பை: ரிசர்வ் வங்கி செவ்வாய்க் கிழமை 2014-15ஆம் நிதியாண்டின் 6வது இருமாத மறுஆய்வு கொள்கையை அறிவித்துள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் படி ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. எனவே ரெப்போ வட்டி விகிதத்தை 7.75 சதவீதமாக நிலை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
ரெப்போ விகிதத்தை போலவே சி.ஆர்.ஆர் விகிதத்தையும் மாற்றவில்லை, எஸ்.எல்.ஆர் விகிதத்தில் மட்டும் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
நாட்டின் வளர்ச்சி
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி வட்டி வகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் நாட்டின் வளர்ச்சி 2016ஆம் நிதியாண்டில் 6.5 சதவீத அளவை எட்டும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வட்டி குறைப்பு
கடந்த ஜனவரி 15ஆம் ரிசர்வ் வங்கி அறிவித்த 0.25% வட்டி குறைப்பின் மூலம் நாட்டின் நிலவும் பணசுருக்க நிலை மேம்பட்டுள்ளதாக தெரியவில்லை என பல பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாத முடிவில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 0.1 சதவீதமாக இருந்தது.
20 மாதங்கள்
மேலும் இந்த வட்டி குறைப்பு 20 மாதங்களுக்கு பிறகு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது. ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நியமனத்திற்கு பிறகு செய்ய முதல் வட்டி குறைப்பு இதுவே.
கட்டுமானத்துறை
நாட்டின் கட்டுமான வளர்ச்சி விகிதம் டிசம்பர் மாதம் 6.7 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
குறைவான வளர்ச்சி
அதுமட்டும் அல்லாமல் வட்டி குறைப்பின் மூலம் நாட்டின் முக்கிய துறையாக கருதப்படும் கோல், கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோல் சுத்திகரிப்பு, ஸ்டீல், சிமெண்ட், உரங்கள் மற்றும் மின்சார துறையில் மிகவும் குறைவான வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது குறிப்பிடதக்கது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications