மும்பை: ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட 6வது நாணய மறுஆய்வு கொள்கையின் மூலம் மும்பை பங்குச்சந்தை 150 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. இதில் வங்கித்துறை பங்குகள் அதிகம் பாதிக்கப்பட்டது.
வங்கித்துறை பாதிப்பிற்கு முக்கிய காரணமாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் வராக் கடன் அளவின் அதிகரிப்பிற்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாத இறுதியில் வெளிவரும் மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி முதலீட்டை அளவை அதிகளவில் குறைத்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தை
இன்று காலை வர்த்தக துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு உயர்வை கண்டு வரும் வேலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியானது. வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் வங்கி துறை பங்குகள் மிகவும் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது. இதனால் வங்கித்துறை பங்குகள் 387 புள்ளிகள் சரிவை கண்டது.
வங்கித்துறை பங்குகள்
இந்நிலையில் ஆக்சிஸ் வங்கி 3.89%, ஹெச்டிஎஃப்சி 2.18, ஸ்பிஐ வங்கி 2%, ஹெச்டிஎஃப்சி வங்கி 1.28%, ஐசிஐசிஐ வங்கி 1.27%, பஞ்சாம் நேஷ்னல் வங்கி 7.06% அளவில் சரிவை தழுவியது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையே போலவே நிஃப்டியும் வர்த்தக துவக்கத்தில் உயர்வை சந்தித்து 50 புள்ளிகள் வரை சரிந்தது.
லாபம் அடைந்த நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தை தற்போது உள்ள நிலையில் பார்தி ஏர்டெல், ஒன்என்ஜிசி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், டிசிஎஸ், ஐடிசி, கோல் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications