மும்பை: நாட்டு மக்கள் அனைவரும் மோடி அரசின் இரண்டாவது மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் வரியில்லா நிதி முதலீட்டின் அளவை 1.50 இலட்சம் ரூபாயில் இருந்து அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2014ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிவிப்பில் மத்திய அரசு இந்த முதலீட்டு அளவை 1 இலட்ச ரூபாயில் இருந்து 1,50,000 ரூபாயாக உயர்த்தியது குறிப்பிடதக்கது.
சேமிப்பு அளவு
நாட்டு மக்களின் சேமிப்பு அளவு கடந்த நிதியாண்டில் 30 சதவீதமாக குறைந்ததை அடுத்து பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு வரியில்லா முதலீட்டு அளவை 1.5 இலட்சமாக உயர்த்தியது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலை
வருகிற பட்ஜெட்டில் வரியில்லா முதலீட்டு அளவை அதிகரிப்பதன் மூலம் வங்கித்துறையில் முதலீட்டு அளவு அதிகரிக்கவும், வங்கித்துறையில் ஏற்ப்பட்டுள்ள வராக் கடன் அளவு குறையவும் மிகப்பெரிய வாய்ப்பாகவும் இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு
புதிய ஓய்வூதிய திட்டம், காப்பீட்டு திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதி, பங்குசார்ந்த சேமிப்பு திட்டங்கள் போன்ற முதலீட்டு திட்டங்களில் ரூ.1,50,000 வரையிலான முதலீட்டுக்கு வருமான வரியில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கப்படுகிறது.
ரகுராம் ராஜன்
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் அளவீட்டை உயர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
முதலீட்டு முறை
மேலும் மத்திய அரசு செயல்படாத மற்றும் லாபம் அளிக்காத துறையில் செய்யப்படும் அதிகப்படியான செலவீணத்தை குறைத்து, அதிக முதலீடு செய்யதுள்ள துறைகளில் செலவீனத்தை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பணவீக்கம் குறையவும், வருவாய் அதிகரிக்கும் என ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
பன்னாட்டு சந்தை முதலீடு
மேலும் ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன் அறிவித்த நாணய மறு ஆய்வு கொள்கையில், இந்திய மக்கள் பன்னாட்டு சந்தைகளில் முதலீடு செய்யும் திட்டமான Liberalised Remittance Scheme திட்டத்தின் முதலீட்டு அளவையும் 2,50,000 டாலராக உயர்த்தியுள்ளது.
முதலீட்டு அளவு அதிகரிப்பு
இத்திட்டத்தின் முதலீட்டு அளவு கடந்த 2013ஆம் ஆண்டில் 75,000 டாலார இருந்தது, அதனை ஜூன் 2014ஆம் ஆண்டில் 1,25,000 டாலராக உயர்த்தியது. தற்போது ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு முதலீட்டு அளவை 2,50,000 டாலர் வரை உயர்த்தியுள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ட்ரம்ப் - ஈரான் மோதல்: இந்திய வங்கித்துறையில் பாதிப்பு ஏற்படுமா? RBI உத்தரவின் பின்னணி என்ன?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications