ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய ஆஃபர்!! "#பிப்ஹரி"
டெல்லி: மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு காதலர் தினத்திற்காக 1,499 ருபாய் என்ற சலுகை கட்டணத்தை அறிவித்தது. இதனை தொடர்ந்து இன்று மீண்டும் பிப்ஹரி ‘#FebHurry' என்ற 2 நாள் 1,899 ரூபாய் சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இச்சலுகையில் விற்பனை சனிக்கிழமை முதல் துவங்குகிறது, இதில் திட்டத்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பயணம் செய்ய வேண்டும்.

விடுமுறை நாட்கள் வரும் வரை இந்திய சந்தையில் விமான பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும், இக்காலகட்டத்தில் பயணிகளின் வருகையை அதிகரிக்க இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்கள் அதிக அளவிலான சலுகைகளை வழங்கி வருகிறது.
இதில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த இருவார காலத்தில் 3 கட்டண சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications