டெல்லி: மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர்இந்தியா, பயணிகள் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்ததால் இந்நிறுவனத்தின் டிக்கெட் வருவாய் 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டின் ஜனவரி மாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 1,500 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் இந்நிறுவனம் கிரிக்கெட் சீசன் துவங்கியதை அடுத்து ஆஸ்திரேலியா செல்லும் பயணிகளுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெயர் கொண்ட உணவுகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. இக்காலகட்டத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர் நஷ்டம்
இந்நிறுவனம் 2014ஆம் ஆண்டில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தது, இதனால் இந்நிறுவனம் மறுசீரமைப்பு திட்டத்தை கொண்டு இந்நிறுவனத்தி மீண்டும் டிசம்பர் மாதத்தில் 14.6 கோடி ரூபாய் லாபகரமாக மாற்றியது. இதே காலகட்டத்தில் 2013ஆம் ஆண்டை ஒப்பிடும் போது இந்நிறுவனம் 168.7 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.
பயணிகள் எண்ணிக்கை
இந்நிறுவனம் 2015ஆம் ஆண்டின் ஜனவரி மாத்தில் 51,829 பயணிகளுக்கு விமான சேவை அளித்துள்ளது. இது கடந்த 2013ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 16.7 சதவீதம் அதிகமாகும்.
வருவாய்
அதிகப்படியான பயணிகள் வருகையின் காரணமாக இந்நிறுவனத்தின் வருவாய் 8.4 சதவீதம் அதிகரித்து 1,500 கோடி ரூபாயாக உள்ளது.
நிறுவன கடன்
இந்நிறுவனம் 40,000 கோடி கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது, இதுவரை ஏர்இந்தியா 36,000 ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தை மீண்டும் லாப நிலைக்கு கொண்டு வரவும், நாட்டின் முன்னணி போக்குவரத்து நிறுவனமாக மாற்றவும் மத்திய அரசு இந்நிறுவனத்திற்கு அதிகப்படியான நிதி ஒதுக்கியுள்ளது.
சர்வதேச விமான பயணிகள்
மேலும் இந்நிறுவனத்தின் சர்வதேச விமான பயணிகள் எண்ணிக்கை 81 சதவீதம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications