கருப்பு பணம் வைத்துள்ள 60 கணக்காளர்களின் பெயரை வெளியிட மத்திய அரசு முடிவு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் ஜெனீவா கிளையில் முறைகேடாக வரி ஏய்ப்பு செய்து பல கோடிக்கணக்கான பணத்தை வைத்திருந்த 60 இந்திய கணக்காளர்களின் பெயரை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு இவ்வங்கியில் கணக்கு வைத்திருந்த 1,195 இந்திய கணக்காளர்கள் பட்டியலை சுவிஸ் வங்கி பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய அரசிற்கு அளித்துள்ளது.

60 கணக்காளர்கள்

60 கணக்காளர்கள்

இதில் பல விசாரணை மற்றும் ஆலோசனைக்கு பின் மத்திய அரசு இப்பட்டியலில் உள்ள 60 கணக்காளர்கள் பெயரை வெளியிடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இதுக்குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், பட்டியலில் உள்ள கணக்காளர்களில் 350 பேரின் கணக்கின் விசாரணை முடிந்துவிட்டது. முழுமையான பணிகள் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் முடிந்து விடும் என தெரிவித்தார்.

1,500 கோடி ரூபாய்

1,500 கோடி ரூபாய்

இப்பட்டியில் 1,195 பேர் இருக்கும்பட்சத்தில் இந்த 60 கணக்காளர்கள் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ளனர். இதன் மூலம் இவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 100 பில்லியன் டாலர்
 

100 பில்லியன் டாலர்

சில வருடங்களுக்கு முன்பு சுவிஸ் ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் கருப்பு வைத்திருந்த 1,00,000த்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் மற்றும் அவரின் இருப்பு அளவு இடங்கிய ஒரு அறிக்கை வெளிவந்தது. இவர்களின் இருப்பு அளவின் மொத்த மதிப்பை கணக்கிடும் போது 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது. இதில் 1195 கணக்காளர்கள் இந்தியர்கள் என்பது குறிப்படதக்கது.

4,479 கோடி ரூபாய்

4,479 கோடி ரூபாய்

இவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 1,195 இந்திய கணக்காளர்களின் மதிப்பு மட்டும் 4.1 பில்லியன் டாலராகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Black money probe: Prosecution initiated against 60 resident Indians

The government is expected to disclose the names of close to 60 Indians and entities as it has recently initiated tax evasion prosecution proceedings against them as part of its crackdown on black money accounts as reported in the HSBC bank's Geneva branch list.
Story first published: Monday, February 9, 2015, 13:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X