டெல்லி: மாநிலப் பிரிப்பால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி தத்தளித்து வந்த ஆந்திராவிற்கு மத்திய அரசு ஆறுதலான செய்தியை வைத்துள்ளது.
ஆந்திர மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக மத்தியஅரசு சுமார் 850 கோடி ரூபாய் ஒதுக்கியதுடன் அந்த மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வரிக் விலக்கு கொள்கைகளையும் அறிவித்துள்ளது.
வளர்ச்சி திட்டங்கள்
ஆந்திர மாநில மறுகட்டமைப்புச் சட்டம் 2014 என்ற புதிய சட்டத்தின் கீழ், மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு தேவையான உதவிகளை சிறப்பு வளர்ச்சித் திட்டங்களின் மூலம் அங்குள்ள பின்தங்கிய பகுதிகள், ராயலசீமா மற்றும் வட கடலோர மாவாட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளது.
50 கோடி ரூபாய்
"2014-15 ஆம் ஆண்டில், மாவட்டத்திற்கு 50 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் ஆந்திராவின் ஏழு பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சிப்பணிகளுக்காக அம் மாநில அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என மத்திய நிதி அமைச்சகம் தன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குழு
மேலும், அமைச்சரவைகளுக்கு இடையிலான ஒரு ஒருங்கிணைந்த குழு ஒன்று உள்துறை அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலைகளை ஆராய்ந்து வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதியில் அம்மாநில அரசுக்கு ஏற்படும் செலவின பற்றாக்குறையை 2014-15 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் சரிகட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா
"எனினும், இந்த குழு சிபாரிசுகளைத் தரும் வரை தற்காலிகமாக ரூபாய் 500 கோடி நடப்பு நிதியாண்டில் அம்மாநிலத்திற்கு வழங்கப்படும்" எனவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு
மேலும் இந்த இரு மாநிலங்களுக்கு வரிச்சலுகைகள் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான வழிவகைகளையும் செய்யும்.
உற்பத்தித் தொழிற்சாலை
இம்மாநிலத்தின் பின் தங்கிய பகுதிகளில் உற்பத்தித் தொழிலை துவங்கும் நிறுவனங்களுக்கு முதல் வருடத்தில் நிறுவப்படும் இயந்திரங்களுக்கு 15 சதவிகிதம் கூடுதல் வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications