15% லாபத்தில் சன் நெட்வொர்க் நிறுவனம்!!
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தொலைகாட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் நிறுவனம் தனது 3ஆம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டது. டிசம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு 214.13 கோடி ரூபாய் என்ற அளவை எட்டி 15.25 சதவீத உயர்வை சந்தித்தது.

கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு 185.79 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.
மேலும் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானமாக இக்காலாண்டில் 552.44 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 8.67 சதவீதம் அதிகமாகும். அதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த செலவீணமும் 3.05 சதவீதம் அதிகரித்து 249.78 கோடியாக உள்ளது.
இதன் மூலம் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் அதிகரித்து 413.40 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications