டெல்லி: 2015ஆம் ஆண்டு துவக்கத்தில் கார் விற்பனை மந்தமாக துவங்கினாலும் ஜனவரி மாத முடிவில் விறுவிறுப்பாக இருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கார் விற்பனை 3.14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு நாட்டின் சிறப்பான பொருளாதார நிலையும் முக்கிய காரணமாக அமைந்தது.
இதுகுறித்து இந்திய அட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜனவரி மாத்தில் மட்டும் இந்தியா முழுவது சுமார் 1,69,300 கார்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை 1,64,149 ஆக இருந்தது என தெரிவித்தது.
விற்பனை மந்தம்
மேலும் 2014ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சுங்க வரி அதிகரிக்கப்பட்டதால் கார் விற்பனை மந்தமாக இருந்தது என இந்திய அட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைவர் விஷ்னு மத்தூர் தெரிவித்துள்ளார்.
மாருதி சுசூகி
மேலும் இந்தியவில் கார் உற்பத்தி ஈடுப்பட்டுள்ள நிறுவனங்களில் மாருதி சுசூகி விற்பனையில் 7.94 சதவீதம் உயர்வை பதிவு செய்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் 89,014 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய்
மாருதி சுசூகி நிறுவனத்திற்கு கடும் போட்டியாளரான ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில் 3.87 சதவீத உயர்வை பதிவு செய்து 34,643 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஹோண்டா
இந்நிறுவநம் வெறும் 1.7 சதவீத உயர்வு மட்டுமே பதிவு செய்துள்ளது. ஜனவரி மாதத்தில் இந்நிறுவனம் 15,597 கார்களை விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
இந்நிறுவனத்தின் மலிவு விலை கார் விற்பனையால் இந்நிறுவனம் விற்பனையில் 37.5 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. இக்காலகட்டத்தில் 11.637 கார்களை விற்பனை செய்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா
இந்தியாவில் கார் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்களில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மட்டுமே விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. இந்நிறுவனம் ஜனவரி மாதத்தில் 3.56 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.
இருசக்கர வாகன விற்பனை
இக்காலகட்டத்தில் இருசக்கர வாகன விற்பனை 1.07 சதவீதம் உயர்ந்து 13,27,957 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.


Click it and Unblock the Notifications