கருப்பு பண விவகாரத்தில் சிக்கிய பெரும் தலைகள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் ஜெனீவா கிளையில் 1,195 இந்தியர்கள் 1,668 வங்கி கணக்குகளில் மத்திய அரசை ஏமாற்றி சுமார் 25 ஆயிரத்து 420 கோடி ரூபாயை பதுக்கியுள்ளனர்.

 

இவ்வங்கியில் பதுக்கியுள்ள கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியார்கள் உட்பட பல நாட்டவர்களின் பெயர்களை அடங்கிய தகவல்களை இவ்வங்கியில் பணியாற்றிய ஹெர்வ் பிலாசின் என்கிற முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்டார். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இவ்வங்கி கருப்பு பணம் குறித்த அனைத்து தகவல்களை அளிக்க ஒப்புக்கொண்டது.

இதன்படி யார் யார் எவ்வளவு பணம் பதுக்கியுள்ளார்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் அரசியல், தொழில்துறை பெரும் தலைகள் பலரும் உள்ளனர்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

எந்த பட்டியல் எடுத்தாலும் இவர் தான் முதல் இடத்தில் உள்ளர். தற்போது அதிக கருப்பு பணம் பதுக்கியுள்ள பட்டியலிலும் இவர் தான் முதல் இடத்தில் உள்ளார். இவர் சுமார் 164.92 கோடி ரூபாய் (26.6 மில்லியன் டாலர்) பதுக்கியுள்ளார்.

அனில் அம்பானி

அனில் அம்பானி

அண்ணன் தம்பி இருவருக்கும் வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் இதில் உள்ள ஒற்றுமைக்கு அளவே இல்லை. இவரும் தனது அண்ணை போலவே 164.92 கோடி ரூபாய் (26.6 மில்லியன் டாலர்) இவ்வங்கி கிளையில் பதுக்கியுள்ளார்.

நரேஷ் கோயல்

நரேஷ் கோயல்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் இவ்வங்கி கிளையில் 116 கோடி ரூபாய் (18.7 மில்லியன் டாலர்) பதுக்கியுள்ளார்.

பருமன் குடும்பம்
 

பருமன் குடும்பம்

டாபர் நிறுவனத்தின் தலைமை வகித்து நடத்தி வரும் பருமன் குடும்பம் பலர் இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் சுமார் 77.5 கோடி ரூபாய் (12.5 மில்லியன் டாலர்) பணத்தை பதுக்கியுள்ளனர்.

அனுரங் டால்மியா

அனுரங் டால்மியா

டால்மியா நிறுவனத்தின துணை தலைவரான அனுரங் டால்மியா இவ்வங்கியில் 59.5 கோடி ரூபாய் (9.6 மில்லியன் டாலர்) பதுக்கியுள்ளார்.

மனு சபாரியா குடும்பம்

மனு சபாரியா குடும்பம்

இந்தியராக இருந்தாலும் தூபாயில் தான் இவர் வாழ்ந்து வருவது. ஜம்போ குரூப் நிறுவனத்தின் தலைவரான இவர் இவ்வங்கி கிளையில் 874 கோடி ரூபாய் (141 மில்லியன் டாலர்) பதுக்கியுள்ளார்.

மகேஷ் திக்கம்தாஸ் தாரணி

மகேஷ் திக்கம்தாஸ் தாரணி

நாட்டின் முன்னணி வீட்டு அலங்காரம் பொருட்களை இறக்குமதி செய்யும் அவர் இவ்வங்கி கணக்கில் 251.7 கோடி ரூபாய் (40.61 மில்லியன் டாலர்) பதுக்கியுள்ளார்.

அனு தாண்டன்

அனு தாண்டன்

முன்னாள் காங்கிரஸ் தலைவரான அனு தாண்டன் இவ்வங்கிக் கணக்கில் 35.8 கோடி ரூபாய் (5.72 மில்லியன் டாலர்) பதுக்கியுள்ளார். இன்னும் பலர் உள்ளனர். இப்போது துறைவாரியார் கருப்பு பணம் பதுக்கியுள்ள ஆசாமிகளை பார்ப்போம்.

தொழில் அதிபர்

தொழில் அதிபர்

இப்பட்டியலில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆனந்த் சந்த் பருமன், ராஜன் நந்தா, யஷோவர்தான் பிர்லா, சந்துரு ராஜேயா, தட்ராஜ் சால்கோகார், பத்ரஷியாம் கோத்தாரி மற்றும் ஷரவன் குப்தா.

வைர வியாபாரிகள்

வைர வியாபாரிகள்

ரசெல் மேத்தா, அனுப் மேத்தா, சுனக் பாரிக், சேத்தன் மேத்தா, கோவிந்பாய் கேக்காடியா மற்றும் குனல் ஷா.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

முன்னாள் அமைச்சர் பிரினிட் கவுர், முன்னாள் மகாராஷ்டிரா முதல் அமைச்சர் நாராயண ரானே, அவர்து மனைவி நீலம், மகள் நீலேஷ் ரானே மற்றும் காங்கிரஸ் அமைச்சர் வசந்த் சேத் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பால் தாக்ரே மருமகள் ஸ்மிதா தாக்ரே ஆகியோர் அடக்கம்

என்ஆர்ஐ

என்ஆர்ஐ

மேலும் என்ஆர்ஐ பட்டியலில் ஸ்வராஜ் பால், மனு சபாரியா, ராஜேந்திர ரூயா, விமல் ரூயா மற்றும் நரேஷ் கோயல்.

மறுப்பு

மறுப்பு

கருப்பு பணம் குறித்து இப்பட்டியலில் உள்ளர்களிடம் கேட்கும் போது முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, நாராயண ரானே, பருமன், நரேஷ் கோயல் ஆகியோ மறுத்துள்ளனர். பிறர் பதில் எதும் அளிக்கவில்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

இந்தியன் எக்ஸ்பிரஸ்

இப்பத்திரக்கை மத்திய அரசு 60 பெயர் கொண்ட பட்டியலை வெளியிடும் முன் இத்தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HSBC Indian list: Who's Who & How Much

The investigation revealed 1,195 Indian HSBC clients, roughly double the 628 names that French authorities gave to the Government in 2011.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X