நியூயார்க்: மொபைல், கணினி மற்றும் மென்பொருள் வடிவமைப்பில் முதன்மை நிறுவனமாக திகழும் ஆப்பிள் நிறுவனம் சந்தை மதிப்பில் 700 பில்லியன் டாலர் என்னும் உயரிய நிலையை எட்டியுள்ளது. இத்தகைய நிலையை இதுவரை எந்த ஒரு நிறுவனமும் எட்டியதில்லை என்பது குறிப்பிடதக்கது.
700 பில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 436 இலட்சம் கோடி ரூபாய். இந்நிலையை பார்த்து ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளர்களான மைக்ரோசாப்ட், சாம்சங் நிறுவனங்கள் வாய்யை பிளந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
இந்நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்கிழமை சந்தை முடிவில் 1.9 சதவீதம் சரிந்து 122.02 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 710 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
டிம் குக்
இதுக்குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக் கூறுகையில் நிறுவனம் எப்போதும் பிற நிறுவனங்களை விட தனித்தும் உயர்ந்திருக்கும். இன்றும் ஆப்பிள் நிறுவனம் யாரும் எட்டாத இடத்தை அடைந்து தனித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஐஓஎஸ் மென்பொருள் மொபைலில் மட்டுமல்லாமல் உங்கள் வீடு, கார் மற்றும் உடல்நலத்திலும் கவனம் செலுத்தி வருகிறது என தெரிவித்தார்.
50 பில்லியன் டாலர்
ஆப்பிள் நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் ஐபோன் 6 மொபைலின் சிறப்பான விற்பனையின் மூலம் சுமார் 50 பில்லயன் டாலர் அளவு வருவாயும், 18 பில்லியன் டாலர் லாபமும் பெற்றுள்ளது.
டிசிஎஸ்
இந்தியாவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் முதன்மையானவை டாடா குழுமத்தின் மென்பொருள் துறையின் கிளை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் தான். இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 4.8 இலட்சம் கோடி ரூபாய் மட்டுமே.
டாப் 5 நிறுவனங்கள்
உலக சந்தையில், சந்தை மதிப்பில் அதிக மதிப்புடைய டாப் 5 நிறுவனங்களை இப்போது பார்ப்போம் ஆப்பிள், எக்சான் மொபைல், மைக்ரோசாப்ட், கூகிள் மற்றும் Berkshire Hathaway.
இந்திய சந்தையில்??
சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 5 இடங்களை பிடித்த நிறுவனம் டிசிஎஸ், ஒஎன்ஜிசி, ஐடிசி, ரிலையன்ஸ் மற்றும் இன்போசிஸ்.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications