கோக் நிறுவன லாபம் 55% சரிவு!! மக்கள் மத்தியில் மவுசு வேகமாக குறைகிறது...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட்லாண்டா: உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் தனது லாப அளவில் 55 சதவீத சரிவை சந்தித்ததுள்ளது.

கடந்த சில வருடங்களாக மக்கள் கார்பனேடெட் குளிர்பானங்கள் மற்றும் டையட் சோடா போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோலா நிறுவனங்கள் விற்பனையில் பெரும் பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிடதக்கது.

நிறுவனத்தின் லாப அளவு

நிறுவனத்தின் லாப அளவு

2014ஆம் நிதியாண்டின் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் அளவு 55 சதவீதம் சரிந்து 770 மில்லியன் டாலராக உள்ளது.

வருவாய்

வருவாய்

அதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் அளவு வால் ஸ்டீரீட் கணிப்புகளை விட அதிகமாக இருந்தது குறிப்பிடதக்கது. இதன் படி டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவு 2 சதவீதம் சரிந்து 10.9 பில்லியன் டாலராக உள்ளது.

பங்கு லாபம்

பங்கு லாபம்

இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு, ஒரு பங்குகிற்கு 17 சென்ட் அளித்துள்ளது.

நாணய பரிமாற்றம்

நாணய பரிமாற்றம்

இக்காலகட்டத்தில் உலக நாடுகளில் நிலவிய நிலையற்ற பொருளாதாரத்தின் காரணமாக நிறுவனத்தின் நாணய பரிமாற்றத்தில் அதிகப்படியான இலப்பு ஏற்பபட்டது, வெனிசூலா வர்த்தகம் மற்றும் வட அமெரிக்காவில் பாடிலிங் ஆப்ரேஷன்ஸ் நிலவிய பிரச்சனைகளால் இந்நிறுவனம் 55 சதவீத சரிவை சந்தித்தாக தெரிவிக்கிறது.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

இந்நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் வருடத்திற்கு 3 பில்லியன் டாலரை சேமித்துள்ளது. எனினும் சேமிப்பு இலக்கையும் இந்நிறுவனம் தவறவிட்டது. இத்தகைய சிக்கல்கள் இல்லை என்றால் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிறகு 44 சென்டுகள் கிடைத்திருக்கும்.

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பு

மேலும் இந்நிறுவனம் தனது மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக உலக நாடுகளில் தனது நிறுவனங்களில் 1,600 முதல் 1,800 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coca-Cola Earnings Plunge 55%

The Coca-Cola Company missed its profitability targets last year, as consumers continued to reduce their appetite for sugary drinks and diet sodas.
Story first published: Wednesday, February 11, 2015, 10:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X