அடுத்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் வங்கி ஊழியர்கள்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த சில மாதங்களாக வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பணி நேரத்தை குறைக்க கோரி தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஜனவரி மாதத்தில் வங்கி அதிகாரிகளின் போராட்டத்தால் 6 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டத்து.

 

தற்போது மத்திய அரசு தங்களது கோரிக்கையை ஏற்காமல் இருப்பதை காரணம் காட்டி வங்கித்துறை அதிகாரிகள் பிப்ரவரி மாதம் 25 முதல் 28ஆம் தேதி வரை மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படப்போவதாக அறிவித்துள்ளனர்.

(அதிகம் செலவழிக்கும் கைகளை கட்டிப்போட சூப்பரான வழிகள்!!)

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

இம்மாத துவக்கத்தில் இந்திய வங்கி அமைப்புடன் (IBA) நடந்திய பேச்சுவார்த்தையில் பணியாளர்கள் சம்பளத்தை 12.5 சதவீதத்தில் இருந்து 13 சதவீதம் மட்டுமே உயர்த்த முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.

19.5 சதவீத உயர்வு

19.5 சதவீத உயர்வு

ஆனால் வங்கி அதிகாரிகளின் அமைப்பு பணியாளர்களின் சம்பளத்தில் 19.5 சதவீத உயர்வு அளிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி வருகின்றனர்.

செலவீன உயர்வு

செலவீன உயர்வு

12.5 சதவிதமாக இருக்கும் போதே மத்திய அரசுக்கு 4000 கோடி ரூபாய் செலவீனமாக உள்ளது. 19.5 சதவீதமாக அதிகரித்தால் ஒய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் உடன் இச்செலவீன மதிப்பு 8,000 கோடி ரூபாயாக உயரும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.

சுமை
 

சுமை

இந்திய வங்கித்துறை தற்போது வராக் கடன் மற்றும் குறைவான இருப்பு ஆகிய பிரச்சனைகளால் தவித்து வருகிறது, பொதுத்துறை வங்கிகளில் இது மிகப்பெரிய தலைவலியாக விளங்குகிறது. இந்நிலையில் இத்தகைய செலவீண உயர்வு மிகப்பெரிய வங்கித்துறைக்கு சுமையாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிச் சேவை

வங்கிச் சேவை

மேலும் வாடிக்கையாளர், வங்கி சேவை திருப்தி அளிக்கும் விதமாக இல்லை என புகார் அளித்து வருகின்றனர். இதில் ஒன்றில் 3 பகுதி புகார்கள் பொதுத்துறை வங்கிகளுடையது என வங்கி துறை தெரிவித்துள்ளது.

புகார்கள்

புகார்கள்

இதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளைகள் மட்டும் 32 சதவீத புகார்களையும், தனியார் வங்கிகள் 22 சதவீத புகார்களையும், பன்னாட்டு வங்கிகள் 6.5 சதவீத புகார்களையும் பெற்றுள்ளது.

பட்ஜெட் 2015

பட்ஜெட் 2015

பட்ஜெட் 2015: ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு எதிர்பார்க்கலாம்...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

As bank staff prepare for next strike

Even as the bank employee unions continue to threaten to strike work to press their demands ranging from higher wages to reduced working hours, customer complaints due to unsatisfactory services in banks continue to be on the rise.
Story first published: Thursday, February 12, 2015, 18:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X