டெல்லி: மத்திய அரசு தொலைதொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2014ஆம் ஆண்டில் நாட்டின் மொபைல் சந்தை அளவில் 8.6% சதவீதமாக குறைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் இதன் அளவு 11.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகளவில் அதிகரித்து வரும் நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் மூலம் மத்திய அரசிற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் நஷ்டம்
இந்நிறுவனம் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது, 2013-14ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் சுமார் 7,000 கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.
மொபைல் வாடிக்கையாளர்
மேலும் நாட்டில் சில்லறை விற்பனை மற்றும் மார்கெட்டிங் துறையில் மொபைல் சந்தை முக்கியமாக திகழ்கிறது. 2012ஆம் ஆண்டில் நாட்டில் 865 மில்லியனாக இருந்த மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 944 மில்லியனாக உயர்ந்தது.
லேண்டுலைன்
இந்நிறுவனம் லேண்டுலைன் சேவையில் மிதமான சரிவை சந்தித்து வந்தாலும், மொபைல் சேவையில் வேகமாக சரிவை கண்டு வருகிறது. இதனை களை மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தரமற்ற சேவை
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இத்தகைய நிலைக்கு முக்கிய காரணமாக இந்நிறுவனத்தின் தரமற்ற சேவை தான் என பல தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனங்கள்
இந்திய மொபைல் சேவையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது, இப்பட்டியலில் ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகிய நிறுவனங்கள் அடுத்தெடுத்த இடங்களை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications