மும்பை: இந்தியாவில் பல நிறுவனங்கள் விமான போக்குவரத்து சேவை அளித்தாலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் சில மட்டுமே அதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்று.
இந்நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைக்கு 8,773 ரூபாய் என்ற சலுகையை அறிவித்துள்ளது. சர்வதேச விமான சேவையில் கட்டண குறைப்பு செய்த முதல் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் தான்.
இந்நாளில் சர்வதேச விமானங்களில் மட்டும் அல்லாமல் உள்நாட்டு விமான சேவையிலும் சில சலுகையை அறிவித்துள்ளது.
சர்வதேச விமானங்கள்
இந்நிறுவனத்தின் விமான சேவையில் இந்தியாவில் இருந்து பாரீஸ், சிங்கப்பூர், பாங்காக், ஹாங்காங், ஹோ சி மின் நகரம், கொழும்பு காட்மாண்டு வழித்தடங்களில் ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது.
டிக்கெட் புக்கிங்
இதற்கான டிக்கெட் புக்கிங் பிப் 13 முதல் 15 வரை நடைபெற உள்ளது. பயன நாள் பிப்ரவரி 13 முதலே முடிவு செய்துக்கொள்ளலாம்.
எக்னாமிக் கிளாஸ்
இந்நிறுவன பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பிஸினஸ் கிளாஸில் பயணம் செய்ய 27,999 ரூபாயும், எக்னாமிக் கிளாஸில் பயணம் செய்ய 8,773 ரூபாய் என்ற சலுகை விலையை அறிவித்துள்ளது.
சுற்றுலா நகரங்கள்
மேலும் இந்நிறுவனத்தின் ஜெட்எஸ்கேப்ஸ் ஹலிடே சேவையின் மூலம் கோவா, ஜெய்பூர், கொச்சி, மூனார், மற்றும் ஆக்ரா ஆகிய பகுதிகளுக்கு 1 நபருக்கு 11,810 ரூபாய் என்ற சலுகை விலையும் அளிக்கிறது. இதில் தங்கும் விடுதி, உணவு, வாகன என அனைத்தும் அடக்கம். மேலும் இச்சலுகையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர்கள் பிப் 21 ஆம் தேதியுடன் தங்களது பயணத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications