டெல்லி: உலகின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமாக கருதப்படும் போர்ப்ஸ் பத்திரிக்கை 2014ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த 30 வயது கீழ் உள்ள 30 நிறுவன தலைவர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவையும் தெற்காசியாவையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் 26 பேர் உள்ளனர். இவர்களை அமெரிக்க வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனம் 'Young Game Changers' என்று கூறுகிறது

இதுக்குறித்து இந்நிறுவனம் கூறுகையில் "எங்கள் நான்காவது ஆண்டு கொண்டாட்டத்தில் 20 துறைகளில், 600 மில்லினியல்கள் உடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பாக உள்ளது." என இப்பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படியலில் நிதித்துறையில் இடம்பெற்றுள்ள 5 இந்தியார்களை பற்றி இப்போது பார்போம்.
1. கணேஷ் பெட்டனபட்லா, 28, இவர் டலரா கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார். அதுமட்டும் அல்லாமல் ஜேபி மோர்கன் எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீட்டில் முன்னாள் வங்கியாளர் மற்றும் பைன் பரூக் நிறுவனத்தின்துணைத் தலைவராவார்.
2. ருஷப் தோஷி, 29, டேவிட் வால்ஷ் முதலீடு மேலாண்மை நிறுவனத்தின் தலைமை வணிகராக உள்ளார். மேலும் இவர்முன்னாள் மோர்கன் ஸ்டான்லி மற்றும் ப்ரேவன் ஹோவர்ட் வணிகர் ஆவார்.

3. சைதன்யா மெஹ்ரா, 28, போர்ட்ஃபோலியோ மேலாளர், ஒச்-ஜிப் மூலதன மேலாண்மை; முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் வணிகர்.
4. நீல் மேத்தா, 29, நிறுவனர், கிரீன் ஓக்ஸ் மூலதனம்
5. விவேக் ராமசாமி, 28, QVT கேபிடல் நிறுவனத்தின் முதலீட்டு ஆய்வாளர் ஆவார். டேனியல் கோல்ட் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தின் இணை மேலாளராகவும் உள்ளார். இந்நிறுவனம்ஹெட்ஜ் நிதி துறையில் மிகப் பெரிய உயிரி தொழில்நுட்ப போர்ட்போலியோ சார்ந்த நிறுவனமாகும்.


Click it and Unblock the Notifications