127 கோடி மக்கள் தொகையில் 12.5 கோடி பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்!! இது தான் இந்தியா..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 215 மில்லியன் மக்கள் (12.5 கோடி மக்கள்) பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக உள்ளனர் என Indiaspend ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய நிலை வளர்ந்து வரும் பொருளாதார நாட்டிற்கு உகந்தது அல்ல என பல பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

1,270 மில்லியன் மக்கள் தொகையில் 215 மில்லியன் மக்கள் தானே என்று எடுத்துக்கொள்ளாதீர்கள், கனடா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் மொத்த மக்கள் தொகையின் அளவு இந்த எண்ணிக்கை.

215 மில்லியன் மக்கள்

215 மில்லியன் மக்கள்

பொருளாதார மதிப்பு கொண்ட பொருட்கள் என மத்திய அரசால் வகுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், மொபைல், டிவி போன்ற ஏழு பொருட்களில் எதுவுமே இல்லாதவர்கள் தான் இந்த 215 மில்லியன் மக்கள். இவர்களிடம் உடமை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை (Zero assets) என்பதுதான் உண்மை என இப்புள்ளிவிபரம் சொல்லுகிறது.

பொருளாதாரா வளர்ச்சி

பொருளாதாரா வளர்ச்சி

டெல்லி தேர்தலில் சாதாரண மற்றும் ஏழை மக்களின் ஆதரவுகளுடன் தான் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால். மேலும் இந்த புள்ளி விபரத்தின் மூலம் மத்திய அரசிற்கு பொருளாதார வளர்ச்சியை விட இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே முக்கியம் என்பதை உணர்த்துகிறது.

43 மில்லியன்

43 மில்லியன்

புள்ளி விபரத்தின் படி நாட்டில் 43 குடும்பங்கள் உடமை எதுமில்லாமல் உள்ளனர், இதனால் 215 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 மில்லியன் குடும்பங்கள் ஆதிவாசி குடும்பங்கள் ஆகும்.

வருத்தம்

வருத்தம்

இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பன் கீ-மூன் மற்றும் உலக வங்கியின் தலைவர் ஜிம் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு

மத்திய அரசு

பிற்படுத்தபட்ட மக்கள்களுக்காக (SC மற்றும் ST வகுப்பை சார்ந்தவர்கள்) மத்திய அரசு அவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த அதிகளவில் செலவீடுவதில்லை, இதனால் அவர் வாழ்வியல் நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருகிறது. இந்நிலையை மாற்ற மத்திய அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

2014-15ஆம் நிதியாண்டில் SC மற்றும் ST வகுப்பை சார்ந்தவர்களின் வாழ்வியலை மேம்படுத்த மத்திய அரசு 82,935 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் பல மாநிலங்கள் இத்தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தாமல் பிற திட்டங்களுக்கு பயன்படுத்த வருகின்றனர் என மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

215 Million Indians Have Zero Assets

In a country where “inclusion” is the emerging political mantra, an estimated 215 million Indians–roughly the population of Canada and Pakistan combined–are largely excluded from economic progress.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X