பெங்களுரூ: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக கருதப்படும் இன்போசிஸ், அமெரிக்க ஆட்டோமேஷன் தொழில்நுட்ப நிறுவனமான பனாயா நிறுவனத்தை 200 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தும் திட்டத்துடன் இன்போசிஸ் உள்ளது.
புதிய நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டம் அனைத்தும் இந்நிறுவனத்தின் 'Renew and New' திட்டத்தின் ஒரு பகுதி எனவும், இதன் மூலம் இந்நிறுவனத்தின் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு துறையை மேம்படுத்த வழிவகுக்கும் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
முதல் படி
இன்போசிஸ் நிறுவனத்தின் 'Renew and New' திட்டத்தின் முதல் படியே பனாயா நிறுவனத்தை கைபற்றியது என இந்நிறுவனத்தின் தலைவரான விஷால் சிக்கா தெரிவித்தார்.
பனாயா
இந்நிறுவனத்தின் கிளவுட்குவாலிட்டி சூட் சேவையை இன்போசிஸ் நிறுவனம் அஜல் SaaS திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டு, குறைவான விலையிலும், எளிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.
மார்ச் 31
மேலும் இந்நிறுவனத்தை கைபற்றும் பணிகள் அனைத்தையும் வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வேட்டை
விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, ரோபடிக்ஸ் துறையில் துவக்க நிறுவனங்களை அதிகளவில் கைபற்ற திட்டமிட்டுள்ளது.
முதல் நிறுவனம்
சிக்கா அவர்கள் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்போசிஸ் நிறுவனம் ஒரு நிறுவனத்தை கூட கைபற்றவில்லை. இதுவே முதல் நிறுவனம் என்பதும் குறிப்பிடதக்கது.
காலாண்டு முடிவுகள்
2014ஆம் நிதியாண்டின் டிசம்பர் மாத முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் பண இருப்பு அளவு 5.65 பில்லியன் டாலராக (34.873 கோடி ரூபாய்) உள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications