டெல்லி: மார்ச் மாதம் நடக்க உள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இந்தியாவின் 8 முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டி போட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலங்களில் ரூபாய் மதிப்பில் அதிக மதிப்புடை ஸ்பெட்ரம் ஏலமாக இது கருதப்படுகிறது.
இந்த ஏலத்தில் உள்ள குழப்பம் மற்றும் கேள்விகளுக்கு தெளிவு பெற பல தொலைதொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
8 நிறுவனங்கள்
இந்த ஏலத்தில் அம்பானி சகோதரர்கள் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் (முகேஷ் அம்பானி), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அனில் அம்பானி) ஆகிய இரு நிறுவனங்கள் ஏலத்தில் களமிறங்கியுள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனம் 4ஜி சேவையை அளிக்க கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்நிறுவனத்தில் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்துள்ளது.
பிற நிறுவனங்கள்
ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை அடுத்து பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார், யூனிநார், டாடா டெலி சர்வீஸ், மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. இதில் ரஷ்ய-இந்திய நிறுவனமான சிஸ்டமா-ஷியாம் நிறுவனம் வெளியேற்றப்பட்டுள்ளது.
1 இலட்சம் கோடி
மத்திய அரசின் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் சுமார் 1 இலட்சம் கோடி வரை நிதி திரட்ட முடியும். ஏலத்தில் போட்டி அதிகமாக இருப்பதால் இத்தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சில நிறுவனங்கள் அலைவரிசையை பெறவில்லை என்றால் சேவை தடைப்படும் என இக்கட்டாண நிலையில் உள்ளது, இதனால் நிறுவனங்கள் அலைகற்றை கைபற்ற வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது. இதன் காரணமாக போட்டி கடுமையாக உள்ளது.
விலை நிர்ணயம்
மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் ஒரு 800 மெகா ஹெட்ஸ் சிடிஎம்ஏ அலைகற்றைக்கு 3,646 கோடி ரூபாய் என ஒரு 900 மெகா ஹெட்ஸ் 3,980 கோடி ரூபாய், ஒரு 1,800 மெகா ஹெட்ஸ் 2,191 கோடி ரூபாய், ஒரு 2,100 மெகா ஹெட்ஸ் 3,705 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளது.
அலைகற்றை
மேலும் இந்த ஏலத்தில் 2,100 MHz பேண்டில் 5MHz கதிர்கள், 800 MHz பேண்டில் 103.75 MHz கதிர்கள், 900 MHz பேண்டில் 17 வட்டங்களில் 177.8 MHz கதிர்கள், 1,800 MHz பேண்டில் 15 வட்டங்களில் 99.2 MHz கதிர்கள் என மொத்தம் 380.75 MHz கதிர்களை மத்திய அரசு ஏலம் விட உள்ளது தொலைதொடர்பு அமைச்சகம்.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications