நியூயார்க்: அமெரிக்காவின் மிகப்பெரிய அக்கவுன்டிங் நிறுவனமான டெலாய்ட் நிறுவனத்தின் அடுத்த சீஇஓவாக புனித் ரன்ஜென் அவர்களை இந்நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் உலகின் நான்கு மிகப்பெரிய அக்கவுன்டிங் நிறுவனங்களின் ஒன்றான டெலாய்ட் நிறுவனத்தை இந்தியர் ஒரு தலைமை தாங்க உள்ளார்.
இதன் மூலம் பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கா நிறுவனங்களை தலைமை தாங்கும் இந்தியர்கள் பட்டியலில் இந்திரா நூயி, சத்ய நாடெல்லா போன்றவர்களின் வரிசையில் தற்போது புனித் ரன்ஜெனும் இணைந்துள்ளார்.
டெலாய்ட் நிறுவனம்
இந்நிறுவனம் உலகில் 150 நாடுகளுக்கும் அதிமான இடங்களில் செயல்பட்டு வருகிறது, இந்நிறுவனத்தில் 2 இலட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். உலகின் நான்கு மிகப்பெரிய அக்கவுன்டிங் நிறுவனங்களான PwC, KPMG, EY, வரிசையில் டெலாய்ட் நிறுவனமும் ஒன்று.
ஜூன் 1
டெலாய்ட் குளோபல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் செயல்பட உள்ளார். இவர் ஹரியானா மாவட்டத்தின் ரோடக் பகுதியை சேர்ந்தவர்.
புனித் ரன்ஜென்
நிறுவனத்தின் புதிய சீஇஓவாக தேர்வானதிற்கு நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் என புனித் ரன்ஜென் தெரிவித்தார். இந்நிறுவனத்தின் இவர் 27 வருடமாக பணியாற்றி வருகிறார்.
கல்வி
இவர் இந்தியாவில் பள்ளி கல்வியை முடித்து விட்டு அமெரிக்காவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டத்தை மேலான்மை துறையில் வில்லமேட்டி பல்கலைகழகத்தில் பெற்றார்.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.


Click it and Unblock the Notifications