2.9% வளர்ச்சியில் சிங்கப்பூர்!! இந்தியா முன்னிலை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர்: இந்தியாவின் அண்டை நாடான சிங்கப்பூர் 2014ஆம் நிதியாண்டில் 2.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போதுள்ள நிலையற்ற உலக பொருளாதாரத்தில் சிங்கப்பூரின் வளர்ச்சி 2015ஆம் ஆண்டில் 2.0 முதல் 4.0 வரையில் இருக்கும் என சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் 2014ஆம் ஆண்டில் டிசம்பர் மாத்துடன் முடிவடைந்த நன்காவது காலாண்டில் சிங்கப்பூர் மிகவும் வலிமையான வளர்ச்சியை பெற்று, உற்பத்தி துறையில் கிடைத்த அதிகப்படியான வளர்ச்சியின் மூலம் இந்நாட்டின் வளர்ச்சி கணிப்புகளையும் தாண்டி அதிகப்படியான வளர்ச்சியை சந்தித்தது.

முன்று மடங்கு உயர்வு

முன்று மடங்கு உயர்வு

இந்நாட்டின் வருடாந்திர வளர்ச்சி 2.6 சதவீதம் அடைந்ததற்கு, 2014ஆம் ஆண்டில் செப்டம்பர்-அக்டோபர் காலகட்டத்தில் 4.9 சதவீதம் வளர்ச்சி அடைந்தது முக்கிய காரணமாக அமைந்தது. 4.9% வளர்ச்சி என்பது கணிப்புகளை விட 3 மடங்கு அதிகமாகும்.

2.6 சதவீத வளர்ச்சி

2.6 சதவீத வளர்ச்சி

மேலும் 2013ஆம் ஆண்டு சிங்கப்பூர் 1.7 சதவீதம் மட்டுமே பெற்றிருந்த நிலையில் 2014ஆம் ஆண்டில் 2.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

 கட்டுமானத்துறை

கட்டுமானத்துறை

2014ஆம் ஆண்டில் இந்நாட்டில் பயோமெடிக்கல் மற்றும் கெமிக்கல் துறை சிறப்பான வளர்ச்சி அடைந்தது, ஆனால் கட்டுமான துறை 6.3 சதவீத வளர்ச்சியில் இருந்து 3 சதவீதமாக குறைந்தது. சேவைத்துறையின் வளர்ச்சியும் 6.1 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறைந்ததுள்ளது.

2015ஆம் ஆண்டு
 

2015ஆம் ஆண்டு

மேலும் உலக பொருளாதார நிலை கடந்த சில மாதங்காக மந்தமாக இருந்தாலும், அடுத்து வரும் 6 மாத காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை காண உள்ளது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சிறப்பான வளர்ச்சியை காண உள்ளது என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியா

இந்தியா

2014ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2014ஆம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் மாத வரையிலான காலகட்டத்தில் நாட்டின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது.

அமெரிக்காவின் வளர்ச்சி

அமெரிக்காவின் வளர்ச்சி

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்கா 2015ஆம் ஆண்டில் உள்நாட்டு தேவை அதிகரிப்பின் காரணமாக சிறப்பான வளர்ச்சியை அடைய உள்ளது.

 குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Singapore economy grows by 2.9% in 2014

Singapore’s economy grew more strongly than initially estimated in the final quarter of last year as manufacturing improved, but the country’s outlook for this year remained modest at 2.0 to 4.0 per cent in the face of an uneven global recovery.
Story first published: Tuesday, February 17, 2015, 16:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X