பெங்களுரூ: 2014ஆம் நிதியாண்டில் இந்தியாவில் சாக்லேட் விற்பனை அமோகமாக இருந்ததாகவும், இதன் மூலம் இக்காலகட்டத்தில் சாக்லேட் வர்த்தகம் ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளதாக யூரோமானிடர் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 24 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடதக்கது. இதற்கு முக்கிய காரணம் சாக்லேட் நிறுவனம் செய்து வரும் அசத்தலான விளம்பரங்கள் தான். சாக்லேட் நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களை பார்க்கும் போதே மக்களை வாங்க தூண்டுகிறது.
117 கிராம்
மேலும் இந்நிறுவனத்தின் ஆய்வின் படி, 2014ஆம் நிதியாண்டில் இந்தியர்கள் சராசரியாக ஒரு வருடத்திற்கு 117 கிராம் சாக்லேட் ருசித்துள்ளனர். உலக சந்தைகளை ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியுள்ளதாக யூரோமானிடர் தெரிவித்துள்ளது.
5வது இடத்தில் இந்தியா
மேலும் இந்நிறுவனத்தின் ஆய்வின் பிடி உலக நாடுகளில் அதிகளவில் சாக்லேட் உட்கொள்ளும் அளவில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. ரஷ்யாவில் தனிநபர் சரசரியாக 5.3 கிலோ சாக்லேட் உட்கொள்ளுகிறார்கள். ரஷ்யாவிற்கு பின் துருக்கி (2 கிலோ), பிரேசில் (1.6 கிலோ), சீனா (200 கிராம்), இந்தியா 117 (கிராம்) சாக்லேட் சாப்பிடுகின்றனர்.
விற்பனை
2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 10,000 கோடி மதிப்பிலான சாக்லெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது, 150 டன் சாக்லேட் உட்கொள்ளப்பட்டுள்ளது. யூரோமானிடர் நிறுவன கணிப்பின் பிடி இந்தியாவில் சாக்லேட் உட்கொள்ளும் அளவு 2019ஆம் ஆண்டில் 250 டன்களாக உயரும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் வர்த்தக அளவு 15,000 கோடியை எட்டும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனங்கள்
இந்தியாவில் அதிகளவிலான சாக்லேட் விற்பனை செய்யும் நிறுவனங்களில் டாப் 3 இடங்களில் மான்டலீஸ் இந்தியா ( முன்னாள் காட்பரி இந்தியா), நெஸ்லே மற்றும் ஃபெரினோ ஆகிய நிறுவனங்கள் உள்ளது.
சந்தை அளவு
மொத்த சாக்லேட் விற்பனையில் 55.5 சதவீத இடத்தை மான்டலீஸ் இந்தியா ( முன்னாள் காட்பரி இந்தியா) பிடித்துள்ளது. இதை தொடர்ந்து 17 சதவீதத்தை நெஸ்லே நிறுவனம் பெற்றுள்ளது.
மான்டலீஸ் இந்தியா
இந்நிறுவனத்தின் விற்பனையில் காட்பரி டைரி மில்க் சாக்லேட் மட்டும் 30.6 சதவீத அளவில் விற்பனையாகியுள்ளது. அதன் பின் பைவ் ஸ்டார் (7.9 %), மன்ச் (6.7 %), கிட்காட் (5.6 %), காட்பெரி ஜெம்ஸ் (5.4 %), காட்பெரி பெர்க் (4.2%), காட்பெரி செலபரேஷன்ஸ் (3.1%), கிண்டர் ஜாய் (3 %), நெஸ்ட்லே பிரிமியம் மில்க் சாக்லேட் (2.6%), பெராரோ ரோச்சர் (2%) என முதல் 10 இடங்களை பெற்றுள்ளன.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.


Click it and Unblock the Notifications