டெல்லி: உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக திகழ்ந்த நோக்கிய நிறுவனம், விற்பனையில் பின்னதங்கி நிறுவனத்தை முழுமையாக மூடும் நிலையில் இந்நிறுவனத்தை சாப்ட்வேர் துறையின் ஜாம்பவான் என போற்றப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கைபற்றியது.
இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் விற்பனையை பெருக்க மைக்ரோசாப்ட் மொபைல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோக்கியா இந்தியா, ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
ஒப்பந்தம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோக்கியா இந்தியா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து மொபைல் விற்பனையை பெருக்க ஹெச்சிஎல் நிறுவனத்துடன் 3 வருட ஒப்பந்தம் செய்துள்ளதாக ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை பங்கு வர்த்தகம்
மைக்ரோசாப்ட் மொபைல் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து ஹெச்சிஎல் நிறுவனம் பங்குச்சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ்
ஹெச்சிஎல் நிறுவனம் மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்தாலும், இந்நிறுவனத்தின் வன்பொருள் விற்பனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்நிறுவனத்தை தேர்தெடுத்துள்ளது.
கிளைகள்
ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் இந்தியாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான சில்லறை விற்பனை கிளைகளை வைத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் 800 நேரடி விநியோகஸ்தகர்கள், 12,400 சேனல் பார்ட்னர் உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் 15,000 டவுன்கள் மற்றும் 664 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.
ஹெச்சிஎல்
இதுக்குறித்து ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் விநியோக பிரிவின் துணை தலைவரான சுதிக்ஷன் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளான விநியோகத்தில் மைக்ரோசாப்ட் மொபைல் நிறுவனம் இணைந்துள்ளது. நிறுவனத்தின் விரிவான கிளைகள் மற்றும் விநியோகஸ்தகர்களை கொண்டு இலக்கை அடைவோம்" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications