டெல்லி: வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பணி நேரத்தை குறைக்க கோரி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசு தங்களது கோரிக்கையை ஏற்காமல் இருப்பதை காரணம் காட்டி வங்கித்துறை அதிகாரிகள் பிப்ரவரி மாதம் 25 முதல் 28ஆம் தேதி வரை மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படப்போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் மார்ச் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
இப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் டெல்லியில் வங்கி அதிகாரிகள் அமைப்புகளுடன் மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில், நிதியமைச்சகத்துடன் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் முடிவுகள் திங்கட்கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு
இம்மாத துவக்கத்தில் இந்திய வங்கி அமைப்புடன் (IBA) நடந்திய பேச்சுவார்த்தையில் பணியாளர்கள் சம்பளத்தை 12.5 சதவீதத்தில் இருந்து 13 சதவீதம் மட்டுமே உயர்த்த முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.
19.5 சதவீத உயர்வு
ஆனால் வங்கி அதிகாரிகளின் அமைப்பு பணியாளர்களின் சம்பளத்தில் 19.5 சதவீத உயர்வு அளிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி வருகின்றனர்.
வேலை நிறுத்த போராட்டம்
ஜனவரி மாதத்தில் வங்கி அதிகாரிகளின் போராட்டத்தால் 6 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டது.


Click it and Unblock the Notifications