நிலக்கரி ஏலத்தில் மத்திய அரசு ரூ.84,000 நிதி திரட்டியுள்ளது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சில மாதங்களுக்கு முன் முறைகேடாக வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமங்களை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் மூலம் நாட்டில் நிலக்கரி திட்டுப்பாடு நிலவியது. நாட்டின் மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நிலக்கரி தட்டுப்படை குறைக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்த 214 நிலக்கரி சுரங்க தொகுதிகளை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டது.

 

இதன் படி ஏலம் கடந்த வாரம் துவங்கியது, 7 நாள் ஏல முடிவில் வெள்ளிக்கிழமை மத்திய அரசு சுமார் 84,000 கோடி நிதி திரட்டியுள்ளது.

நிலக்கரி ஏலத்தில் மத்திய அரசு ரூ.84,000 நிதி திரட்டியுள்ளது!!

மேலும் இரண்டாம் கட்ட ஏலம் பிப்ரவரி 25ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்க உள்ளதாக கோல் இந்தியா செயலாளர் அனில் ஸ்வரூப் தெரிவித்தார்.

முதல் கட்ட ஏலத்தில் 27 தொகுதிகளை முறைப்படுத்தப்படாத துறைகளுக்கும், 56 தொகுதிகளை மின் உற்பத்தி செய்யப்படும் முறைப்படுத்தப்படாத துறைகளுக்கு ஒதுக்கப்பட்டதாக இத்துறை தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட ஏலத்தில் மீதமுள்ள 83 தொகுதிகளை ஏலம் விட திட்டமிட்டுள்ளதாகவும் இத்துறை தொரிவித்துள்ளது.

இந்த 83,662 கோடி ரூபாய் நிதியில் பெரும்பாலான தொகை ஏழை மாநிலங்களுக்கு செல்ல உள்ளதாக ஸ்வரூப் தெரிவித்தார். இதில் 39,900 கோடி ரூபாய் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கும், 18,900 கோடி ரூபாய் மகாராோடிரா மாநிலத்திற்கு சொல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coal auction: First round pulls in Rs 83,662 crore for government

On the seventh day of auction Friday of coal blocks whose allotments were cancelled by the Supreme Court, the government said it will start the second tranche of auctions by February 25. The government has till now raised nearly Rs 84,000 crores.
Story first published: Saturday, February 21, 2015, 14:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X