டெல்லி: மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு நாட்டின் 8 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போடுகிறது. இந்த ஏலத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் சுமார் 20,435 கோடி ரூபாயை முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது.
8 நிறுவனங்கள்
இந்த ஏலத்தில் அம்பானி சகோதரர்கள் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் (முகேஷ் அம்பானி), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அனில் அம்பானி), பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார், யூனிநார், டாடா டெலி சர்வீஸ், மற்றும் ஏர்டெல் ஆகிய 8 நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. இதில் ரஷ்ய-இந்திய நிறுவனமான சிஸ்டமா-ஷியாம் நிறுவனம் வெளியேற்றப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி
முன்வைப்பு தொகை அளித்த நிறுவனங்களில் அதிகம் செலுத்தியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் தான்.
பிற நிறுவனங்கள்
மேலும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் ரூ. 4,500 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ. 1,175 கோடி, பார்தி ஏர்டெல் ரூ. 4,336 கோடி, ஐடியா செல்லுலர் ரூ. 4,000 கோடி, வோடபோன் ரூ. 3,700 கோடி, டாடா டெலிசர்வீசஸ் ரூ. 1,500 கோடி, யுனிநார் ரூ. 724 கோடி, ஏர்செல் ரூ. 500 கோடி செலுத்தியுள்ளன.
1 லட்சம் கோடி
மத்திய அரசின் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் சுமார் 1 இலட்சம் கோடி வரை நிதி திரட்ட முடியும். ஏலத்தில் போட்டி அதிகமாக இருப்பதால் இத்தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஏர்டெல், வோடபோன்
ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் லைசென்ஸ் 2015-16-ல் முடிகிறது. இதனால் போட்டு கடுமையாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications