டெல்லி: 2014ஆம் நிதியாண்டின் டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 2.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, 2013ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இதன் அளவு தற்போது இரட்டிப்பாகியுள்ளது. 2013ஆம் நிதியாண்டில் இக்காலகட்டத்தில் அன்னிய முதலீட்டின் அளவு 1.10 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.
27 சதவீத உயர்வு
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அன்னிய முதலீட்டின் அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகரித்து 21.04 பில்லியன் டாலராக இருக்கிறது. கடந்த நிதியாண்டின் அன்னிய முதலீட்டின் அளவு 16.56 பில்லியன் டாலராக இருந்தது என தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்தது.
டெலிகாம்
இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகம் பெற்ற துறைகளில் டெலிகாம் துறையில் நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் 2.67 பில்லியன் டாலர் முதலீடு பெற்றுள்ளது.
பிற துறைகள்
டெலிகாம் நிறுவனத்தை தொடர்ந்து அதிகப்படியான அன்னிய முதலீட்டை பெற்ற துறைகளில் இரண்டாம் இடம் பெறுவது சேவை துறை (2.29 பில்லியன் டாலர்), அட்டோமொபைல் ( 1.58 பில்லியன் டாலர்), பார்மா ( 1.21 பில்லியன் டாலர்) மற்றும் கம்பியூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள் ($ 971 மில்லியன்).
மொரிஷியஸ்
மேலும் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யப்பட்ட நாடுகளில் மொரிஷியஸ் முதல் இடத்தில் உள்ளது. இதன் படி மொரிஷியஸ் இந்தியாவில் 5.89 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சிங்கப்பூர் 4.31 பில்லியன் டாலர், நெதர்லேண்டு 2.57 பில்லியன் டாலர், அமெரிக்கா 1.48 பில்லியன் டாலர் மற்றும் ஜப்பான் 1.42 பில்லியன் டாலர் அளவு முதலீடாக பெற்றுள்ளது.
அன்னிய முதலீட்டின் தேவை
மேலும் நாட்டின் வளரச்சிக்கு அடுத்த 5 வருடத்தில் கட்டுமானத்துறை, துறைமுகம், விமான நிலையம் மற்றும் நெடுஞ்சாலை ஆகியவற்றை மேம்படுத்த 1 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுகிறது.
முக்கிய துறைகள்
மத்திய அரசு காப்பீடு, ரயில்வே மற்றும் மருத்துவ வசதிகள் ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications