பட்ஜெட் 2015: "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களுக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட உள்ள மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களும் காத்துக்கிடக்கிறது. இந்நிலையில் நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள துவக்க நிறுவனங்களை (Startup) ஊக்கப்படுத்த நிதியமைச்சகம் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அரசு மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான அரசு நாட்டின் பல முக்கிய துறைகளில் சிறந்து விளங்கும் துவக்க நிறுவனங்களை ஊக்கப்படுத்த, நிறுவன வளர்ச்சிக்கு எதுவாக அரசு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

2,000 கோடி ரூபாய் நிதி

2,000 கோடி ரூபாய் நிதி

துவக்க நிறுவனங்களை ஊக்கப்படுத்த மத்திய நிதியமைச்சகம் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட் வெளியீட்டில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் அறிக்கை

பட்ஜெட் அறிக்கை

கடந்த பட்ஜெட் அறிக்கையிலேயே மத்திய அரசு துவக்க நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும், அதற்கான அரசு இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யவும் தயாராக உள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது தற்போது இதனை செயல்படுத்தியுள்ளது.

சீனாவிற்கு அடுத்து இந்தியா

சீனாவிற்கு அடுத்து இந்தியா

இதன் மூலம் இந்தியா புதிய நிறுவனங்களை அதிகளவில் துவக்க எதுவாக இருக்கும் நாடுகளில் டாப் 3 இடங்களுக்குள் வரும் என மத்திய அரசு நம்புகிறது. தற்போது முதல் இரண்டு இடங்களில் இஸ்ரேல் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளது.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

தற்போதைய நிலையில் மத்திய அரசு தனது முதலீட்டை அதிகளவில் மென்பொருள் மற்றும் பயோடெக் துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

வென்சர் கேப்பிடல்

வென்சர் கேப்பிடல்

கடந்த வருடம் இந்திய நிறுவனங்களில் வென்சர் கேப்பிடலாக சுமார் 12,000 கோடி ரூபாய் (2 பில்லியன் டாலர் ) பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2015: FM Arun Jaitley may unveil Rs 2,000 crore ‘fund of funds’ to turbo-charge startups

The finance minister is expected to announce a slew of measures designed to turbo-charge startups, including preferential treatment for government purchases and easier rules to list companies in India when Arun Jaitley unveils the budget on Saturday, according to sources in the government and industry
Story first published: Tuesday, February 24, 2015, 13:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X