டெல்லி: மத்திய தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பு திங்கட்கிழமை மொபைல் மற்றும் லேண்ட்லைன் சேவைகளின் கட்டணத்தில் சில குறைப்புகளை அறிவித்தது.
தொலைதொடர்பு நிறுவனங்களுக்கிடையே சேவை இணைப்பிற்காக செலுத்தப்படும் கட்டணங்களில் ஒன்றான உள்ளிணைப்பு கட்டணம் என்று அழைக்கப்படும் interconnection charges அளவை டிராய் அமைப்பு குறைத்துள்ளது. கட்டண குறைப்பு பற்றிய முழுமையான தகவல்களை இதுவரை டிராய் வெளியிடவில்லை.
கட்டண குறைப்பு
தி ஹிந்து நாளிதல் அளித்த தகவலின் படி செல் டூ செல் இணைப்பு சேவைக்கு 0.20 பைசாவில் இருந்து 0.14 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் செல் டூ லேண்ட்லைன், லேண்ட்லைன் டூ லேண்ட்லைன், லேண்ட்லைன் டூ செல் சேவைகளுக்கான இணைப்பு கட்டணத்தை 20 பைசாவில் இருந்து 0.00பைசாவாக (இலவச சேவை) குறைக்கப்பட்டுள்ளது.
லேண்ட்லைன் சேவை
லேண்ட்லைன் சேவையில் அதிக கட்டணங்கள் விதிக்கப்படுவதால் இந்தியாவில் லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது. இதனை ஊக்கப்படுத்தவே டிராய் அமைப்பு, லேண்ட்லைன் சேவைக்கும் கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா
மேலும் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் லேண்ட்லைன் சேவைக்கான இந்த கட்டண குறைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிவேக இண்டர்நெட்
இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் அதிவேக இண்டர்நெட், வையர்லெஸ் நெட்வொர்க் சேவையை நாடுகின்றனர். இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் குறைவாக இருக்கும் இத்துறையில் தேவைக்கு ஏற்ப சேவை அளிக்க முடியவில்லை என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு நன்மை
உள்ளிணைப்பு கட்டணங்களின் 30% குறைப்பு மொபைல் மற்றும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களின் பணத்தை அதிகளவில் மிச்சப்படுத்தும். மேலும் இது கட்டண குறைப்பாக பார்க்க முடியாது, சலுகையாக தான் பார்க்கவேண்டும். மேலும் இக்கட்டண குறைப்பால் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என இந்திய செல்லுலார் அப்ரேட்டார் அசோஷியேஷன் அமைப்பின் தலைவர் ராஜன் தெரிவித்தார்,.
லேண்ட்லைன் சேவை
இந்தியாவில் லேண்ட்லைன் சேவை பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு, இதில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனம் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் தான். கடந்த சில வருடங்களாக இந்நிறுவனத்தின் லேண்டுலைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் வருவாய் கடுமையாக குறைந்துள்ளது.
தனியார் நிறுவனங்கள்
இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் மொபைல் வாடிக்கையாளர்கள் அளவை ஒப்பிடும்போது லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவு.
ஏர்டெல்
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனங்களில் ஏர்டெல் முன்னிலையில் உள்ளது. மேலும் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள ஸ்பெக்ரம் ஏலத்தில் ஏர்டெல் உட்பட நாட்டின் 8 தொலைதொடர்ப்பு நிறுவனங்கள் கலந்து கொள்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications