பட்ஜெட் 2015: நுகர்வோர் சந்தையை ஊக்கப்படுத்த கலால் வரி குறைக்கப்படுமா??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு நாட்டின் நுகர்வோர் விற்பனையை அதிகரிக்க 2012ஆம் ஆண்டு, கலால் வரியை 4 சதவீதமாக குறைத்தது. இந்த குறைப்பை அடுத்த இரண்டு வருடங்கள் 2014ஆம் ஆண்டு வரை மத்திய அரசு நீட்டிப்பு செய்தது.

 

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாளே மத்திய அரசு கலால் வரி குறைப்பை ரத்து செய்தது. இதன் மூலம் நாட்டில் வாகனங்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்தது. வரி அதிகாரிப்பால் நாட்டில் நுகர்வோர் பொருட்களின் விற்பனை கணிசமாக குறைந்தது குறிப்பிடதக்கது.

பட்ஜெட் 2015

பட்ஜெட் 2015

மத்திய அரசு பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட உள்ள பட்ஜெட்டில் கலால் வரி குறைப்பை நுகர்வோர் நிறுவனங்கள் எதிர்பார்த்து வருவதாக விடியோகான் நிறுவனத்தின் தலைவர் அனிருத் தத்து தெரிவித்தார்.

கலால் வரி குறைப்பு

கலால் வரி குறைப்பு

மத்திய அரசு கலால் வரியை குறைந்தால் நாட்டின் உற்பத்தி துறைக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும் எனவும் அனிருத் தத்து தெரிவித்தார். உற்பத்தி துறை வளர்வதன் மூலம் மறைமுகமாக வேலைவாய்ப்பு அதிகரிப்பு, ஏற்றுமதி அதிகரிப்பு, நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைப்பு போன்ற பல நன்மைகள் உள்ளது.

மேக் இன் இந்தியா
 

மேக் இன் இந்தியா

2015ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பேனல் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் பல திட்ட வடிவங்களை அமைத்துள்ளது.

விற்பனை

விற்பனை

மேலும் கலால் வரி குறைப்பு குறைந்து Whirlpool இந்திய கிளையின் தலைவர் ஷரதக் ரே சவுத்ரி கூறுகையில், "கலால் வரி குறைப்பதினால் நுகர்வேர் பொருட்களின் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகளவில் பொருட்களை வாங்க முற்படுவார்கள்." என தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Relax excise duty for job revival in consumer durables industry

The first and foremost expectation from the Budget 2015 will be that the Government reconsider the increased excise duty sops as it will give a boost to manufacturing and consumer durables sector
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X