டெல்லி: 240 வருட பழமைவாய்ந்த இந்திய தபால் துறை புதிதாக வளர்ந்துள்ள டிஜிட்டல் உலகத்துடன் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதில் வெற்றி பெறும் வாய்ப்பாக தபால் துறைக்கு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் கைகொடுத்துள்ளது.
இதன் மூலம் தற்போது இந்திய தபால் துறை மிகப்பெரிய கனவுகளை கொண்டு செயல்பட துவங்கியுள்ளது.
ஈகாமர்ஸ் துறையுடன் இணைப்பு
இந்திய தபால் துறை நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இதன் மூலம் ஈகாமர்ஸ் நிறுவன பொருட்களின் விநியோகம் தனியார் விநியோக நிறுவனங்களால் செல்லமுடியாத இடங்களுக்குகூட தபால் துறையால் எளிதாக செல்ல முடியும். இதனை பயன்படுத்தி நாட்டிடன் அனைத்து பகுதிகளிலும் கால்தடம் பதிக்க ஈகாமர்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.
இந்திய தபால் துறை
டிஜிட்டல் உலகின் வளர்ச்சியால் இத்துறையின் முக்கிய சேவையான தபால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் செய்த இந்த இணைப்பு இத்துறையை மீண்டும் வெற்றிப்பாதையில் ஈட்டுச்செல்ல உள்ளது.
வர்த்தக இலக்கு
அடுத்த 24 மாதங்களில் இப்பிரிவின் (ஈகாமர்ஸ்) வருவாய் அளவு மட்டும் 5,000 கோடி ரூபாயாக உயர்த்த இந்திய தபால் துறை தனது இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
2013ஆம் நிதியாண்டு வருவாய்
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2013ஆம் நிதியாண்டில் இந்திய தபால் துறை சுமார் 10,750 கோடி ரூபாய் வருவாய் எட்டியுள்ளது.
ஈகாமர்ஸ் வருவாய்
நடப்பு நிதியாண்டில் ஈகாமர்ஸ் பிரிவின் வருவாய் மட்டும் 100 கோடி ரூபாயாக இருக்கிறது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
விரிவாக்கம்
தபால் துறை அடுத்த ஒரு வருடத்தில் 20 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் ஈகாமர்ஸ் விநியோக முறையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
போட்டி
தற்போது இந்திய தபால் துறை ஈகாமர்ஸ் துறை நிறுவனங்களுடன் இணைந்ததன் மூலம் தபால் துறை, தனியார் விநியோக நிறுவனங்களான பெட்எக்ஸ், டிடிடிசி, ப்ளு டார்ட் மற்றும் டிஹெச்எல் நிறுவனத்துடன் போட்டி போட்டு வருகிறது.
அதிகப்படியான விநியோகம்
இந்தியாவில் ஈகாமர்ஸ் துறையின் மூலம் அதிகப்படியான பொருட்களை விநியோகம் செய்யும் மாநிலங்களில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது, இதனை தொடர்ந்து ஹரியான, டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தெடுத்த இடங்களை பிடித்துள்ளது.
வளர்ச்சி
இந்தியாவில் ஈகாமர்ஸ் துறை 2013ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலராக இருந்தது. சந்தை கணிப்புகளின் படி 2018ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 23 பில்லியன் டாலராக உயரும் என ஆயவுகள் தெரிவிக்கிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications