டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்த வேளையில் மும்பை பங்குச்சந்தை 200 புள்ளிகள் சரிந்தது.
அதுமட்டும் அல்லாமல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று ரயில்வே துறை சார்ந்த முக்கியமான நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்தித்ததுள்ளது.
பங்குச் சந்தைகள்
இதனால் இன்றைய பங்குச்சந்தை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது, மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டியும் 44.50 புள்ளிகள் வரை சரிந்து 8,723.50 புள்ளி வரை சரிந்து பாதாளத்தை தொட்டது.
ரயில்வே துறை பங்குகள்
டீட்டகார் வேகனஸ் லிமிடெட், டெக்ஸ்மேகோ ரயில் மற்றும் என்ஜினியரிங் லிமிடெட், கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட், கன்டைனர் கார்ப் ஆஃப் இந்தியா லிமிடெட் போன்ற அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்தது.
சுரேஷ் பிரபு
இன்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்த ரயில்வே பட்ஜெட்டில் எரிபொருளை சேமிக்கும் பல பசுமை திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்த பலருக்கு மத்திய ரயில்வே பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
பசுமை திட்டங்கள்
இந்த பட்ஜெட்டில் சோலார் எனர்ஜி, வேஸ்ட் டூ எனர்ஜி, சிஎன்ஜி மற்றும் தண்ணீர் மறுசுழற்சி திட்டம் போன்ற பல திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர் அறிவித்தது சோலார் எனர்ஜி மட்டுமே
சோலார் எனர்ஜி
மத்திய அரசின் கனவு திட்டமான சோலார் மின்சார உற்பத்தி திட்டத்தை ரயில்வே துறையிலும் பயன்படுத்த சுரேஷ் பிரபு திட்டமிட்டுள்ளார். இதன் படி ரயில்வே நிலையம், கட்டிடங்கள் போன்ற ஏதுவான அனைத்து பகுதிகளில் சோலார் பேனல் தளங்களை அமைத்துக், கூடிய விரைவில் மின்சார உற்பத்தியை துவங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு கருவிகள்
ரயில் பெட்டிகள் தீ படிப்பதை தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு பெட்டிகளிலும் தீ எச்சரிக்கை மற்றும் தடுப்பு முறை மற்றும் ரயில்கள் மோதலை தடுக்கும் அமைப்புகளையும் அமைக்கப்படும் என சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications