டெல்லி: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய துவங்கியுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக விளங்கும் இந்திய ரயில்வே துறை கடந்த 20 வருடங்களில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையவில்லை என அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

மேலும் இத்துறை வளர்ச்சி அடைய அதிகப்படியான முதலீடும், அதிகளவிலான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் ரயில் பயணிகளின் வருகை எண்ணிக்கையை அதிகரிக்க நான்கு முக்கிய குறிக்கோள்களை வகுத்துள்ளோம். இதன் படி பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான பயணத்தை அளித்தல், ரயில்வே உட்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், சிறப்பான வாடிக்கையாளர் சேவையை அளித்தல் மற்றும் ரயில்வே துறையின் நிதி நிலைமை மேம்படுத்துவது.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications