டெல்லி: இந்தியாவில் 5 பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களில் தனியார் வங்கித்துறை அதிகாரிகளை நெகிழ்வு சம்பளம் அடிப்பிடையில் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுநாள் வரை வங்கித்துறையில் பணியிடங்கள் காலியாகும் பட்சத்தில் அரசு அதிகரிகளையே இப்பணியிடங்களில் நியமிக்கப்படுவர். ஆனால் இம்முறை அரசு வங்கிகளில் வருவாய் மற்றும் வாடிக்கையாளர் அளவை அதிகரிக்க நிதியமைச்சகம் தகுதிவாய்ந்த தனியார் வங்கி அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டது. இதன் படி மத்திய அரசும் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக இருக்கும் வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி.
இப்பணியிடங்களுக்கு அரசு மற்றும் தனியார் வங்கி அதிகாரிகளும் விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்க்கு குறைந்தது 15 வருட அனுபவம் தேவை எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் அனைவரும் 3 கட்ட தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications