டெல்லி: 2015-16ஆம் நிதியாண்டில் பொது மற்றும் தனியார் நிறுவன பங்கு இருப்பை குறைந்து சுமார் 69,500 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2014ஆம் நிதியாண்டில் இதன் அளவு 58,425 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.
கடந்த சில மாதங்களில் மத்திய அரசு சில நிறுவனங்களின் பங்குகளை விற்றது, ஆனால் தற்போது மத்திய அரசு நிர்ணயம் செய்ய இலக்கில் இதன் அளவு மிகவும் குறைவு.
நிதி திரட்டுதல்
இதன் படி 2015ஆம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு இருப்பை குறைப்புதன் மூலம் 36,925 கோடி ரூபாயும், பங்கு விற்பனையில் ஹிந்துஸ்தான் மற்றும் பால்கோ நிறுவனத்தின் எஞ்சிய பங்குகளை விற்பதன் மூலம் 25,000 கோடி ரூபாயும், தனியார் நிறுவனங்களில் ஆக்சிஸ் வங்கி, லார்சன் & டியூப்ரோ மற்றும் ஐடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் 6500 கோடிரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கோல் இந்தியா
பொதுத்துறை நிறுவனங்களில் கோல் இந்தியா நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் 22,558 கோடி ரூபாயும், ஸ்டீல் அத்தாரட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையின் மூலம் 1700 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.
ஓஎன்ஜிசி நிறுவனம்
மேலும் வருகிற ஏப்ரல் மாதத்தில் ஓஎன்ஜிசி நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், இந்திய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகளவில் குறைந்தது. இதன் மூலம் டிசம்பர் மாதம் விற்க வேண்டிய இந்நிறுவன பங்குகளை ஏப்ரல் மாதத்தில் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications