ஆள்சேர்ப்பில் இறங்கிய ஏர் இந்தியா!! 197 பைலட்கள் தேவை..
டெல்லி: மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் ஏற்படும் நிறுவன வளர்ச்சி மற்றும் பணியாளர்களின் ஒய்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் சுமார் 197 புதிய பைலட்களை நிறுவனத்தில் இணைக்க உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் பிப்ரவரி 1ஆம் தேதி அளித்த தகவலின் படி சுமார் 1464 பைலட்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அடுத்தி இரண்டு வருடத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு இந்நிறுவனத்தில் 197 பைலட்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சரான மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாகக நாடாளுமன்றத்திற்கு பதில் அளித்தார்.
கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ஓரே ஒரு பைலட்டை மட்டும் தான் நிறுவனத்தில் இணைத்துக்கொண்டது. 2013ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 2 ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications