டெல்லி: நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் சுமார் 37,305 வாகனங்களை விற்றுள்ளது. கலால் வரி உயர்விற்கு பின் பல நிறுவனங்களின் விற்பனை அளவு பாதிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் விற்பனை சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 34,005 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடதக்கது. இது கடந்த வருடத்தை விட 9.7 சதவீத வளரச்சியாகும்.

இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை அதிகரித்தாலும், ஏற்றுமதியில் 17.5 சதவீத சரிவை தழுவியுள்ளது. பிப்ரவரி 2015ஆம் நிதியாண்டில் 10,307 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த வருடத்தில் 12,500 ஆக இருந்தது குறிப்பிடதக்கது.
இதுக்குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உயர் துணை தலைவரான ராகேஷ் ஸ்ரீவட்சவ் கூறுகையில்,"ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 வாகனத்தின் வெற்றியால் பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம் சுமார் 37,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது."
மேலும் இக்காலகட்டத்தில் புதிதாக ஹுண்டாய் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications