டெல்லி: மத்திய அரசு கடந்த வாரம் விமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தியது. இதுக்குறித்து விமான போக்குவரத்து துறையின் வல்லுனரான ஹர்ஷவர்தன் கூறுகையில் விமான கட்டண குறைப்பிற்கு முக்கிய காரணமாக விளங்கும் விமான எரிபொருளின் விலையை மத்திய அரசு 8.2 சதவீதம் அதிகரித்ததை தொடர்ந்து விமான கட்டணம் ஒரு பயணிக்கு சுமார் 500 ரூபாய் வரை உயரும் என தெரிவித்தார்.
சேவை வரி
விமான எரிபொருள் விலை அதிகரித்தது மட்டும் அல்லாமல் மத்திய அரசு பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்ட மத்திய பட்ஜெட் அறிக்கையில் சேவை வரியை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் விமான பயணிகளின் கட்டணத்தில் அதிகளவிலான உயர்வு ஏற்படும் எனவும், இத்துறை வளர்ச்சியில் இது மிகப்பெரிய தடையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை
விமான எரிபொருள் விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த 8.2 சதவீதம் உயர்விற்கு பிறகு டெல்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை 50,363 ரூபாயாக உள்ளது.
40 சதவீத செலவீனம்
இந்திய விமான சேவையில் 40 சதவீத செலவீனம் எரிபொருள் உட்கொள்ளுகிறது. இந்த உயர்வால் விமான கட்டணங்கள் நேரடியாக பாதிக்கும்.
சர்வதேச சந்தை
மேலும் சர்வதேச சந்தையில் விமான கட்டணங்கள் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பை ஏற்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் சனிக்கிழமையே விலை உயர்வை அறிவித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications