இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி!!

நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் 2015ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களில் முகேஷ் அம்பானி கடந்த 8 வருடமாக தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். இந்த வருடம் 21 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இடம்

முதல் இடம்

உலகளவில் இப்பிட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பில் கேட்ஸ் 79.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். கடந்த 21 வருடத்தில் இவர் 16 வருடமாக முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கார்லோஸ் ஸ்லிம் மற்றும் வாரன் பஃபெட்

கார்லோஸ் ஸ்லிம் மற்றும் வாரன் பஃபெட்

பில் கேட்ஸ் தொடர்ந்து 2ஆம் இடத்தில் மெக்சிக்கோவின் கார்லோஸ் ஸ்லிம், 3வது இடத்தில் அமெரிக்க முன்னணி முதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் நிறுவனரான வாரன் பஃபெட் பிடித்துள்ளனர்.

90 இந்தியர்கள்

90 இந்தியர்கள்

இப்பிட்டியலில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 90 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரும் அடக்கம் என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் இப்பட்டியில் இடம்பெற்றுள்ள டாப் 10 இந்தியர்களை பார்போம்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் சொத்தின் மதிப்பு சமார் 21 பில்லியன் டாலர் உடன் இப்பட்டியலில் 39வது இடத்தில் உள்ளார். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரகவும், நிர்வாக இயக்குநரகவும் பொறுப்பு வகுக்கிறார். அனைவரும் வியக்கும் வண்ணம் மும்பையில் இருக்கும் இவரது வீட்டின் (அன்டிலா) மதிப்பு மட்டும் 50-70 மில்லியன் டாலர்.

திலிப் சங்கவி

திலிப் சங்கவி

இந்தியாவின் முன்னணி மருந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலிப் சங்கவி இப்பட்டியலில் 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 44வது இடத்தில் உள்ளார்.

அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

இவரது சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர், பெங்களூரை தலைமையகமாக கொண்டு உலக முழுவதும் விரிந்து இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகுக்கிறார். இவர் தனது 2 பில்லியன் டாலர் அளவு சொத்துக்களை தனது அறக்கட்டளையின் முலம் நன்கொடையாக கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் இப்பட்டியலில் 14.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 66வது இடத்தில் உள்ளார்.

ஹிந்துஜா சகோதரர்கள்

ஹிந்துஜா சகோதரர்கள்

ஹிந்துஜா சகோதரர்கள் 14.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 69வது இடத்தில் உள்ளது. இவர்கள் ஆட்டோமோட்டிவ், ரியல் எஸ்டேட், மற்றும் எண்ணெய் ஆகியவற்றில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

லட்சுமி மிட்டல்

லட்சுமி மிட்டல்

இவரது சொத்து மதிப்பு 13.5 பில்லியன் டாலர், இவர் எசெலார் மிட்டல் என்னும் மிகப்பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவரகவும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பு வகுக்கிறார். மேலும் இவர் கல்கத்தாவில் இருக்கும் செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். இப்பட்டியலில் 82 வது இடத்தில் உள்ளார்.

குமார் மங்கலம் பிர்லா

குமார் மங்கலம் பிர்லா

குமார் மங்கலம் பிர்லா ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர். உலகத்தில் சிமெண்ட் மற்றும் அலுமினிய உற்பத்தில் பெரும் பங்கை வகுக்கிறது. இவர் பிர்லா குடும்பத்தின் நான்காம் தலைமுறை. இவரது சொத்து மதிப்பு 9 பில்லியன் டாலர் உடன் இப்பட்டியலில் 142வது இடத்தை பிடித்துள்ளார்.

உதய் கோடக்

உதய் கோடக்

இந்தியாவில் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவரான உதய் கோடக் அவர்களின் சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர். இப்பட்டியலில் 185வது இடத்தை பிடித்துள்ளார்.

கெளதம் ஆதானி

கெளதம் ஆதானி

கெளதம் ஆதானியின் சொத்து மதிப்பு 6.6 பில்லியன் டாலர் ஆகும், இப்பட்டியலில் 208வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்தியவின் முன்னணி வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஆதானி குருப் நிறுவனத்தின் தலைவர்.

சுனில் மிட்டல்

சுனில் மிட்டல்

சுனில் மிட்டலின் சுமார் 6.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 208வது இடத்தில் உள்ளார். உலகின் ஐந்தாவது மிக பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் உரிமையாளர் இவர்.

சைரஸ் மிஸ்திரி

சைரஸ் மிஸ்திரி

சால்ட் முதல் சாஃப்ட்வேர் வரை பல்வேறு துறைகளில் வணிகம் செய்யும் டாடா குரூப் நிறுவனத்தின் தலைவரான இவர் 6.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 208வது இடத்தில் உள்ளார்.

அனில் அம்பானி

அனில் அம்பானி

இப்பிட்டியலில் முதல் இடத்தை பிடித்த முகேஷ் அம்பானியின் தம்பியான அனில் அம்பானி 4 பில்லியன் டாலர் மதிப்புடன் இப்பிட்டியலில் 418வது இடத்தில் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+