ரூ.1 லட்சம் கோடி ஈட்டித் தரும் ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று துவங்குகிறது!!

டெல்லி: இந்தியாவில் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் மார்ச் 4ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியாவின் முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் பங்கேற்க உள்ளது.

மேலும் இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கும், ஏர்டெல் நிறுவனத்திற்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசின் நிதி தேவையை பெருமளவில் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏலம்

ஸ்பெக்ட்ரம் ஏலம்

இந்திய தொலைதொடர்பு அமைச்சகம் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் 380.75 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை முன்று அலைவரிசையில் விற்க உள்ளது அதாவது 800 மெகாஹெட்ஸ், 900 மெகாஹெட்ஸ், 1800 மெகாஹெட்ஸ். மேலும் 5 மெகாஹெட்ஸ் அலைகற்றை 2100 மெகாஹெட்ஸ் அலைவரிசையில் 3ஜி சேவைக்காக ஏலம் விட உள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் ஒரு 800 மெகா ஹெட்ஸ் சிடிஎம்ஏ அலைகற்றைக்கு 3,646 கோடி ரூபாய் என ஒரு 900 மெகா ஹெட்ஸ் 3,980 கோடி ரூபாய், ஒரு 1,800 மெகா ஹெட்ஸ் 2,191 கோடி ரூபாய், ஒரு 2,100 மெகா ஹெட்ஸ் 3,705 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளது.

8 நிறுவனங்கள்

8 நிறுவனங்கள்

இந்த ஏலத்தில் அம்பானி சகோதரர்கள் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் (முகேஷ் அம்பானி), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அனில் அம்பானி) ஆகிய இரு நிறுவனங்கள் ஏலத்தில் களமிறங்கியுள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனம் 4ஜி சேவையை அளிக்க கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்துள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை அடுத்து பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார், யூனிநார், டாடா டெலி சர்வீஸ், மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. இதில் ரஷ்ய-இந்திய நிறுவனமான சிஸ்டமா-ஷியாம் நிறுவனம் வெளியேற்றப்பட்டுள்ளது.

முன்வைப்புத் தொகை

முன்வைப்புத் தொகை

மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு நாட்டின் 8 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போடுகிறது. இந்த ஏலத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் சுமார் 20,435 கோடி ரூபாயை முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது.

அலைகற்றை

அலைகற்றை

மேலும் இந்த ஏலத்தில் 2,100 MHz பேண்டில் 5MHz கதிர்கள், 800 MHz பேண்டில் 103.75 MHz கதிர்கள், 900 MHz பேண்டில் 17 வட்டங்களில் 177.8 MHz கதிர்கள், 1,800 MHz பேண்டில் 15 வட்டங்களில் 99.2 MHz கதிர்கள் என மொத்தம் 380.75 MHz கதிர்களை மத்திய அரசு ஏலம் விட உள்ளது தொலைதொடர்பு அமைச்சகம்.

1 இலட்சம் கோடி

1 இலட்சம் கோடி

மத்திய அரசின் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் சுமார் 1 இலட்சம் கோடி வரை நிதி திரட்ட முடியும். ஆனால் ஏலத்திற்கு முந்தைய கணிப்புகளின் படி இந்த ஏலத்தில் சுமார் 82,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் என தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏலத்தில் போட்டி அதிகமாக இருப்பதால் இத்தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

17 வட்டங்கள்

17 வட்டங்கள்

மேலும் இந்த ஏலம் இந்தியாவில் இருக்கும் 22 தொலைதொடர்பு வட்டங்களில் 17 வட்டங்களுக்கும் மட்டும் நடக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+