ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை குறைத்தற்கு என்ன காரணம்??

மும்பை: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் வெளியிட்ட முன்றாவது வர்த்தக நாளில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் புதன்கிழமை வங்கிகளுக்கும் அளிக்கப்படும் கடன் விகிதமான ரெப்போ விகிதத்தை 7.75 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக குறைந்துள்ளார்.

இதன் மூலம் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளருக்கும் அளிக்கப்படும் வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றில் வட்டிக் குறைப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரகுராம் ராஜன் அறிவித்த திடீர் வட்டி குறைப்பிற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

பட்ஜெட்

பட்ஜெட்

2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முக்கியமான பல வளர்ச்சி திட்டங்கள் உள்ளது, இந்த திட்டஙகளை செயல்படுத்த பல கட்ட முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது. பொருளாதாரம் வளர்ச்சி மிகுந்த இக்காலகட்டத்தில் நாட்டின் பணவீக்கம் மிகப்பெரிய தடையாகும் இருப்பதை ரிசர்வ் வங்கி விரும்பவில்லை.

மேலும் மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி வகிதத்தை அதிகரிக்கும் நோக்குடன் மாநில அரசுகளின் நிதி நிலையை மேம்படுத்த அதிகப்படியான நிதியை ஒதுக்கியுள்ளது. இத்தகைய நிதி நிலை வித்தியாசத்தை மேம்படுத்தவே இந்த வட்டி குறைப்பை அறிவித்துள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

 

மானியங்கள்

மானியங்கள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் மத்திய அரசு அதிகளவிலான நிதியை மானியமாக அளித்துள்ளது. மேலும் மத்திய அரசு நாட்டின் கட்டுமானத்துறையில் அதிகளவில் முதலிடு செய்ய திட்டமிட்டள்ளது மத்திய அரசு. இதன் படி நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

நாட்டின் பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இனி வரும் நாணய மறுஆய்வு கொள்கை அனைத்தும் நாட்டின் பணவீக்கத்தை குறைக்கும் வகையில் தயாரிக்கப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் முதல் படி தான் வட்டிக்குறைப்பு.

ஜிடிபி

ஜிடிபி

புதிய திட்ட கணக்கீட்டு முறைப்படி நாட்டின் ஜிடிபி அளவு 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வல்லரசு நாடுகளுடன் போட்டிப்போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இத்தகை வலிமையான பொருளாதாரத்தின் காரணமாகவும் ரிசர்வ் வங்கி வட்டி வகித குறைப்பை அறிவித்துள்ளது.

ரூபாய்  மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்கா டாலருக்கும் எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கும் தருவாயில் இந்த வட்டி வகித குறைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

குறைந்து வரும் பணவீக்கம்

குறைந்து வரும் பணவீக்கம்

ஜனவரி மாத வட்டிக் குறைப்பின் மூலம் நாட்டின் பணவீக்கம் மிதமான வேகத்தில் சரிந்து வருவதால் மேற்படியான வட்டிக் குறைப்பு நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் அளவை குறைக்க ஏதுவாக அமையும் என ரகுராம் ராஜன் தெரிவித்தார். இந்த 6 காரணங்களை முன்நிலைப்படுத்தியே ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பை அறிவித்துள்ளது.

முன்கூட்டிய நடவடிக்கை

முன்கூட்டிய நடவடிக்கை

நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், வங்கித்துறையில் வராக் கடன் அளவு அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், பணவீக்கத்தை குறைக்கவும் ரிசர்வ் வங்கி முன்கூட்டிய நடவடிக்கை எடுக்கும் வகையில் வட்டிக் குறைப்பை அறிவிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சி.ஆர்.ஆர் வகிதம்

சி.ஆர்.ஆர் வகிதம்

மேலும் வங்கிகள் பெறும் டெப்பாசிட் தொகையில் ரிசர்வ் வங்கியிடம் வைக்கப்படும் வைப்பு அளவை மாற்றாமல் 4 சதவீதமாக அறிவித்துள்ளது.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் நிலையான பொருளாதாரம் காரணமாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக குறைத்தது. இதன் பின் வெளியிட்ட 2014ஆம் நிதியாண்டின் ஆறாவது இருமாத மறுஆய்வு கொள்கையில் எந்த விதமான வட்டிகுறைப்பும் இல்லாமல் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

கணிப்புகள்

கணிப்புகள்

சந்தை கணிப்புகளின் படி அடுத்த 3 வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் நிலையாக இருந்தால் ரிசர்வ் வங்கி சுமார் 1.25% வரை வட்டிக்குறைப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 0.25 சதவீத குறைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பணவியல் கொள்கை கட்டமைப்பு

பணவியல் கொள்கை கட்டமைப்பு

ரிசர்வ் வங்கி வெளியிடும் பணவியல் கொள்கை கட்டமைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்த வட்டிக்குறைப்பு ஏற்றதாக இருக்கும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது.

மக்கள் எதிர்பார்ப்பு

மக்கள் எதிர்பார்ப்பு

ரிசர்வ் வங்கி கடந்த முறை அறிவித்த வட்டிக் குறைப்பிற்கு இரண்டு பொதுத்துறை வங்கிகள் மட்டுமே வட்டி வகிதங்களை குறைத்தது. தனியார் வங்கிகளும் பிற பொதுத்துறை வங்கிகளும் எந்தவிதமான வட்டி வகிதத்தை குறைக்கவில்லை. இம்முறை மக்கள் அதிகளவிலான வட்டி வகித குறைப்பு எதிர்பார்த்து உள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+