கோயம்புத்தூர்: நாட்டின் பெரிய வாட்ச் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் நிறுவனம் கோயம்புத்தூரில் புதிதாக துவங்கியுள்ள தொழிற்சாலையில் வாட்ச் தயாரிப்புக்கான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உதிரிபாகங்களின் உற்பத்தியைத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் இப்பகுதியில் இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டைட்டன் கம்பெனி
"டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த ஸ்டீல் உள்ளகங்களை (cases) தயாரிக்கும் பணியை கோயம்புத்தூரில் உள்ள சுமார் 75 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆலையில் துவங்கியுள்ளது" என அந்த நிறுவனம் பங்குச் மும்பை பங்குச் சந்தை விவரப் பதிவில் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் தொழிற்சாலை
11.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை 75 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் உள்ளகங்களை (cases) தயாரிக்கும் அளவை 2 மில்லியனாக உயர்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாட்ச் தயாரிப்பு
இந்த தொழிற்சாலையில் வாட்ச் தயாரிப்புக்கான ஸ்டீல் உள்ளகங்கள், அதற்கான உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள், பிரஸ் ஷாப், மெஷினிங், பாலிஷிங் மற்றும் அசெம்ப்ளி ஆகிய அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உற்பத்தி மையமாகத் திகழ்வதுடன் இதர சேவைகளின் நிர்வாகம், பராமரிப்பு, உற்பத்திச் செலவுக் கணக்கு மற்றும் தரக் கட்டுப்பாட்டு மேலாண்மை ஆகியவற்றியும் உள்ளடகியிருக்கும்.
ஆறாவது இடம்
ஒசூர் உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் வட இந்தியாவில் மூன்று அசெம்ப்ளி தொழிலகங்களையும் கொண்டு உலக அளவில் வாட்ச் உற்பத்தி நிறுவனங்களில் ஆறாவது இடத்தில் டைட்டன் நிறுவனம் உள்ளது.
மேலாண்மை இயக்குனர்
இதுக்குறித்து இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாஸ்கர் பட் கூறுகையில் டைட்டன் நிறுவனம் தன்னுடைய அனைத்து தொழில்களிலும் மிகவும் பெருமை கொள்ளத் தக்கவகையில் சேவைகளை வழங்குகிறோம். இந்த பயணத்தில் உலகத்தரம் வாய்ந்த ஸ்டீல் உள்ளகங்கள் தயாரிப்பு ஒரு முக்கிய அங்கம் என தெரிவித்தார்.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications