டெல்லி: மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் ஏற்கனவே தன்னுடைய ஜூரிச், சிட்டகாங் மற்றும் வியன்னா நகர கிளைகளை மூடியதுடன் தற்போது கெய்ரோ மற்றும் டெஹ்ரானில் உள்ள அலுவலகங்களை மூட முடிவு செய்துள்ளது.
இதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரத்தியேக குழு கெய்ரோ மற்றும் டெஹ்ரானில் உள்ள கிளைகளை மூடத் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்திற்கான இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மகேஷ் சர்மா
"கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா கெய்ரோ கிளையின் மூலமாக 58.56 லட்ச ரூபாயும், டெஹ்ரான் கிளை மூலமாக 138.75 லட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது" என திரு சர்மா எழுத்து பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார்.
டொரான்டோ
இதனிடையே, ஏர் இந்தியா நிறுவனத்தின் டொரான்டோ நிலையத்தின் அளவினை குறைக்கும் பணிகளில் உள்ள சிக்கல்களை ஆராயும் வேலையில் ஒரு குழு ஈடுபட்டுள்ளதாகவும் அப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமானம்
ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 67.11 கோடி ரூபாய் வருவாயை டொரான்டோ கிளை மூலமாக கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ஈட்டியது.
சிட்டகாங், வியன்னா
கடந்த நவம்பர் மாதத்தில் சிட்டகாங் மற்றும் வியன்னா நகரங்களிலுள்ள தனது பயணச்சீட்டு பதிவு அலுவலகங்களை மூடியதுடன் ஜூரிச்சில் உள்ள அலுவலகத்தையும் கடந்த அக்டோபர் மாதம் ஏர் இந்தியா மூடியது.
வெளிநாட்டு நகரங்கள்
2013-14 ஆம் ஆண்டில், விமானங்கள் இயக்கப்படாத சுமார் 9 வெளிநாட்டு நகரங்களில் தனது அலுவலகங்களைக் கொண்டிருந்தது. இவற்றில், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலிஸ், டொரான்டோ, ஆம்ஸ்டர்டாம், கெய்ரோ, டெஹ்ரான், ஜூரிச், வியன்னா மற்றும் சிட்டகாங்க் ஆகிய நகரங்கள் அடங்கும்.
3 அலுவலகங்கள்
இனி வரும் காலங்களில் இந்த நிறுவனம் வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்களை மட்டும் கொண்டு இயங்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications