ரூ.10 லட்சத்திற்கு குறைவான வீட்டுக் கடனா.. உங்களுக்காக ஆர்பிஐ தரும் ஒரு சின்ன சலுகை!

மும்பை: இந்தியாவில் வீட்டு வசதி துறையை மேம்படுத்தவும், அனைவருக்கும் வீட்டு வசதி அளிக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான வீட்டுக்கடன் திட்டத்தில் பத்திர செலவு மற்றும் பதிவுக் கட்டணங்களை வங்கி தரப்பு அளிக்கும் கடன் தொகையில் இணைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

10 லட்ச ரூபாய் கடன்

10 லட்ச ரூபாய் கடன்

உதாரணமாக குமரன் தற்போது 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்தின் மீது கடன் பெறுகிறான் என்று வைத்துக்கொள்வோம். (பொதுவாக வங்கி அளிக்கும் வீட்டுக் கடனில் புதிய சொத்துகளை வாங்கும்போது 15 சதவீத பணத்தை வாடிக்கையாளரும், 85 சதவீத பணத்தை வங்கி அளிக்கும்.)

பத்திர செலவு மற்றும் இதர கட்டணங்கள்

பத்திர செலவு மற்றும் இதர கட்டணங்கள்

தற்போது உள்ள முறைப்படி பத்திர செலவு, பதிவு கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் அனைத்தும் வாடிக்கையாளர் தரப்பில் ஆதாவது குமரன் வங்கியில் செலுத்த வேண்டும்.

கூடுதல் சுமை

கூடுதல் சுமை

இதனால் வாடிக்கையாளருக்கு கூடுதல் சுமை உண்டாகும். மேலும் வருமானம் குறைவாக இருக்கும் மக்களை அது அதிகளவில் பாதிக்கிறது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்த நிலையை உணர்ந்த ரிசர்வ் வங்கி, வங்கி மதிப்பீட்டில் (Appraisal value of a property by bank) 10 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்கும் சொத்துக்களுக்கு பத்திர செலவு, பதிவு கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் என அனைத்தும் வங்கி அளிக்கும் 85 சதவீத கடனில் இணைக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வருமானம் குறைவாக இருக்கும் மக்கள்

வருமானம் குறைவாக இருக்கும் மக்கள்

அதன் மூலம் வருமானம் குறைவாக இருக்கும் மக்கள் (low income groups) அதிகளவில் பயன்பெறுவர்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பகுதி வாரியான கடன் அளிப்பு

பகுதி வாரியான கடன் அளிப்பு

மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் மத்திய மற்றும் மாநில அரசு அல்லது அரசு துறைகள் செயல்படுத்தும் வீட்டுக்கடன் திட்டத்திற்கு வங்கிகள் அளிக்கும் கடன்களை பகுதி பகுதியாக மட்டுமே அளிக்க உத்திரவிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+