மும்பை: உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சில்லறை வர்த்தக சந்தையான இ-காமர்ஸ் துறையில் மொபைல் மூலம் ஷாப்பிங் செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடத்தில் ஷாப்பிங் செய்வோரின் எண்ணிக்கை இரட்டிபாகியுள்ளது.
மேலும் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், மின்திரா மற்றும் ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள் கணினி மூலம் செய்யப்படும் வர்த்தகத்தை விட மொபைல் ஷாப்பிங்கில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது.
மாஸ்டர்கார்டு
இதுக்குறித்து 14 நாடுகளில் கிரேடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு நிறுவனமான மாஸ்டர்கார்டு செய்த ஆய்வில் சீனாவில் 70.1 சதவீதம் பேர் மொபைல் ஷாப்பிங் செய்துள்ளாதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் சீனா முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.
பிற நாடுகள்
சீனாவை தொடந்து இந்தியா (62.9 சதவீதம்), தைவான் (62.6 சதவீதம்), தாய்லாந்து (58.8 சதவீதம்) மற்றும் இந்தோனேஷியா(54.9 சதவீதம்) பேர் மொபைல் ஷாப்பிங் செய்துள்ளதாகவும், விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு
மாஸ்டர்கார்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் 14 நாடுகளில் (சந்தைகளில்) சுமார் 7,000 வாடிக்கையாளர்களிடம் இதுக்குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
மொபைல் ஷாப்பிங்
இந்தியாவில் மொபைல் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரின் எண்ணிக்கை கடந்த முன்று வருடமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 2012ஆம் ஆண்டில் மொபைல் ஷாப்பிங் செய்வோரின் அளவு 30.3 சதவீதமாகவும், 2013ஆம் ஆண்டில் 47 சதவீதமாகவும், 2014ஆம் ஆண்டில் 62.9 சதவீதமாகவும் உள்ளது.
அதிக வாடிக்கையாளர்கள்
இந்தியாவின் முன்னணி அன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான பிளிப்கார்ட் நிறுவனத்தில் 73 சதவீதம் பேர் மொபைல் ஷாப்பிங் செய்கின்றனர். அதேபோல் அமேசான் நிறுவனத்தில் 50.7 சதவீதம் பேர், ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 41.6 சதவீதம் பேர், ஈபே நிறுவனத்தில் 30.4 சதவீம் பேர், மின்திரா நிறுவனத்தில் 20.8 சதவீதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications