டெல்லி: இந்தியாவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டிப்போடும் டெக் மஹிந்திரா நிறுவனம் வியட்நாம் தலைநகரான ஹனாய் பகுதியில் புதிய விற்பனை கிளையை துவங்கியுள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனத்தின் சேவை மற்றும் வர்த்தகத்தை வியட்நாமில் விரிவாக்கம் செய்யவும் டெக் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் வியட்நாமில் வாடிக்கையாளர்களிடம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதாகவும், இதில் பல வங்கி வாடிக்கையாளர்கள் இருப்பாதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் இப்பகுதியில் வர்த்தகத்தை அதிகரிக்கவும், விரிவாக்கம் செய்யவும் டெக் மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
மேலும் அடுத்த 2-3 வருடத்தில் இந்த அலுவலகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் டெக் மஹிந்திரா நிறுவனம் பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கை தெரிவித்து இருந்தது.


Click it and Unblock the Notifications