ஜெட் ஏர்வேஸ்: சரக்கு விமான போக்குவரத்து சேவை அளிக்க மத்திய அரசு ஒப்புதல்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் முன்னணி பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் கடுமையாக போட்டி வரும் நிலையில், இந்நிறுவனத்திற்கு சரக்கு விமான சேவையை அளிக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் பிற விமான நிறுவனங்கள் மத்தியில் போட்டி அதிகரிக்கவும், சேவை விரிவாக்க பணிகளில் இறங்கும் என நம்பப்படுகிறது.

ஜெட் ஏர்வேஸ்: சரக்கு விமான போக்குவரத்து சேவை அளிக்க மத்திய அரசு ஒப்புதல்

இத்திட்டத்தை செயல்படுத்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், இதனுடைய கூட்டு நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து வெட் லீஸ் ஒப்பந்த முறையில் துவக்க நடவடிக்கையாக ஏர்பஸ் ஏ330-200 ரக விமானத்தை குத்தகைக்கு பெற உள்ளது.

இந்த ஒரே ஒரு விமானத்தை வைத்த ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவில் சரக்கு விமான போக்குவரத்தை துவங்க உள்ளது.

வெட் லீஸ் ஒப்பந்தம் என்றால் விமானத்தை குத்தகைக்கு எடுக்கும்போது பைலெட், உதவியாளர்கள், இன்சூரன்ஸ் மற்றும் பராமரிப்பு சேவைகளுடன் எடுப்பதுதான் வெட் லீஸ் ஒப்பந்தம்

எனினும், முதல்கட்டமாக ஆறு மாதங்களுக்கு மட்டும் அந்த விமானத்தை நிறுவனம் இயக்குவதற்கு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet receives govt nod to commence cargo services

The ministry of civil aviation has granted in-principle approval to Naresh Goyal-promoted Jet Airways to wet lease one freighter aircraft from Etihad Airways to begin cargo services.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X