டெல்லி: மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் நடத்தி வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சனிக்கிழமையுடன் முடிவடைந்த 24 சுற்றுகளில் மத்திய அரசு சுமார் 86,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
இத்தொகை மத்திய அரசின் கணிப்புகளை விட சுமார் 4,000 கோடி ரூபாய் அதிகமாகும். தொலைதொடர்பு நிறுவனங்களிடையே உள்ள அதிகப்படியான போட்டியின் காரணமாக இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரூ.1 லட்சம் கோடி வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு மாநிலங்கள்
மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 900 MHz பேண்ட் அலைகற்றைகளின் விலை கடந்த 4 நாள் ஏலத்தில் சுமார் 17 சதவீசதம் அளவில் உயர்ந்ததுள்ளது.
800 MHz அலைகற்றை
கடந்த வார புதன்கிழமை துவங்கிய ஏலத்தில் 800 MHz பேண்ட் அலைகற்றை மீதான ஏலத்தில் மந்த நிலை நிலவியது. ஆனால் 4வது நாள் துவக்கத்தில் சூடுப்பிடிக்க துவங்கியது. மேலும் 2,100MHz அலைகற்றை இதுவரை எந்த ஒரு நிறுவனமும் ஏலத்தில் எடுக்கவில்லை என மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போட்டி
மேலும் இந்த ஏலத்தில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் கடுமையாக போட்டிப்போட்டு வருகிறது. இதன் மூலம் இந்த ஏலத்தில் கிடைக்கப்பெறும் தொகையில் 50% தொகை இந்த இரண்டு நிறுவனங்களுடையதாக இருக்கும் என ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
விலை உயர்வு
மார்ச் 4ஆம் தேதி முதல் துவங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முடிவில் வாடிக்கையாளர்களின் கட்டணத்தில் 15% வரை உயர்வை எதிர்பார்க்கலாம் என தொலைதொடர்புத் துறை வல்லுனர் கிருஷ்ண குமார் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications