பெரும் பணக்காரர்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 7வது இடம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அல்ட்ரா ரிச் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 2014ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 1,652 ஆக உயர்ந்துள்ளதாக Knight Frank நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 3,371 ஆக உயரும் எனவும் இந்நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முழு வேகத்தில் இந்தியா

முழு வேகத்தில் இந்தியா

இதுக்குறித்து Knight Frank நிறுவனத்தின் இந்திய கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிசிர் பால்ஜெய் கூறுகையில், 2014ஆம் ஆண்டு துவக்கம் முதல் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் அன்னிய முதலீட்டின் அளவும் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.

மும்பை

மும்பை

இந்தியாவில் இருக்கும் 1,652 பெரும் பணக்காரர்களில் 50 சதவீதம் பேர் மும்பையில் தான் உள்ளனர். இதன் மூலம் மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலகில் அதிக பில்லியனர்கள் வாழும் நகரங்களில் மும்பை 6வது இடத்தில் உள்ளது.

டெல்லி மற்றும் ஹைதராபாத்

டெல்லி மற்றும் ஹைதராபாத்

மும்பைக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் அதிக பில்லியனர்களை கொண்ட நகரங்களில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளது.

பிற நகரங்கள்
 

பிற நகரங்கள்

மும்பையை தொடர்ந்து நியூயார்க் 114 பில்லியனர்களுடன் முதல் இடத்திலும், 91 பில்லியனர்களுடன் மாஸ்கோ 2வது இடத்தில் உள்ளது.

டாப் 3 இடங்கள்

டாப் 3 இடங்கள்

இப்பட்டியலில் அதிகளவிலான பில்லியனர்கள் கொண்ட நாடுகளில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களை பிடித்துள்ளது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

மேலும் இந்த ஆய்வறிக்கையில் ரியல் எஸ்டேட் துறையில் துபாயை விடவும் விலை உயர்ந்ததாக மும்மை விளங்குவதாக தெரிவித்துள்ளது. மும்பையில் முக்கிய பகுதியில் ஒரு சதுரடியின் விலை 61,300 ரூபாய், துபாயில் 40,455 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

With 68 billionaires, India ranks 7th globally; Mumbai leads in India with 30

Wealth creation in India is likely to accelerate significantly with the number of ultra-wealthy individuals expected to double to 3,371 by 2024, a Knight Frank report says.
Story first published: Tuesday, March 10, 2015, 12:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X